திருச்சி நகர சரகத்தில் நடைபெற்ற ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் கழக விழாவில்
சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் உடைய பள்ளிகள் என தேர்ந்தெடுக்கப்பட்டதில்
தென்னூர் கிழக்கு நகராட்சி தொடக்கப்பள்ளியும் ஒன்றாகும். பள்ளியின் சார்பில் அதற்கான சான்று மற்றும் நினவு பரிசை   பள்ளியின் ஆசிரியர் சே. தாமஸ் ராக்லண்ட்
பெற்றுகொள்கிறார். மேடையில் திருச்சி நகர சரக உதவி தொடக்க கல்வி அலுவலர் முனைவர்
திரு. இரா . செல்வரெத்தினம் அவர்களுடன்  கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.செல்வராஜ், அவர்கள், ஒன்றிய PTA செயலாளர் திரு அருணகிரிநாதன்
அவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் திரு. சிராஜுதீன் மற்றும் ஆசிரியர் திரு.பால்ராஜ் அவர்களும் உள்ளனர். 
 
தனி ஊதியம் தெளிவுரை

தனி ஊதியம் ரூபாய் 750 பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு

Click here to download the fin.dept letter.

பதவி உயர்வில் சென்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு குறித்து  அறிந்து  கொள்ள வேண்டிய தகவல்.

              ஒருவருக்கு     பணிக்காலத்தில்     இரண்டு       ஊக்க         ஊதிய           
உயர்வுகளுக்கு விதிகளில் இடமுண்டு. ஆனால் தற்போது சில இடங்களில் பதவி உயர்வு பெற்ற பின் உயர் கல்வி படிப்பவர்களுக்கு ஊக்க ஊதிய மறுக்கப்படுவதாக கிடைத்த தகவலினால் இத்தகவல் வெளியிடப்படுகிறது.

Click here to download to read the incentive news.
  
 ஊதிய குறைதீர்க்கும் பிரிவிடம் மனு  அனுப்புதல் விபரம்.

 ஊதிய முரண்பாடுகளை  களைய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  அக்குழுவிடம் 04 .05 .12 க்குள் மனுக்கள் அனுப்பப்பட வேண்டும். இக்குழுஅமைக்கப்பட்டதிலிருந்தே கல்வித் துறைக்கு  பொருந்துமா என்ற கேள்வி கேட்கப்பட்டுகொண்டே 
 இருந்தது. 

தற்போது தபாலில் அனுப்பலாமா அல்லது  e-mail மற்றும் நேரில் தான் தர வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. சந்தேகம் வந்துவிட்டால் எது சிறந்ததோ அதையே செய்வது நல்லது. தபாலில் அனுப்புவது எளிது என்று அனுப்பி நம் முயற்சி வீணாகி விடக் கூடாது.எனவே மின் அஞ்சலில் அனுப்புவதே  சிறந்தது. மின் அஞ்சலில் அனுப்புபவர்கள் வசதிக்காக மனு மாதிரியை word  வடிவத்தில் bamini  இல் வடிவமைத்து இணைத்துள்ளோம். அதனை பதிவிறக்கம் செய்து  உங்கள்
 பெயர்,  முகவரி  போன்றவைகளை சேர்த்து pdf format ஆக மாற்றி மின் அஞ்சல் செய்யவும். நேரில் மனு அளிப்பவர்கள் pdf இல் உள்ளதை வசதிக்கேற்ப பயன்படுத்தவும்.  முயற்சி பயன் உள்ளதாக இருக்க வேண்டும். எனவே மின் அஞ்சல் அனுப்புவதே சிறந்தது. மின்னஞ்சல் முகவரி. dspgrc@tn.gov.in  

Click Here to download the model letter in word format for send e-mail after changing for yourself


   


6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய ஊதிய குறை தீர்க்கும் மூவர் குழு அமைப்பு:

Click Here to View the G.O. 123:
ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பம் வெளியீடு 

Click Here to Download the Application :
இடைநிலை ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்
         தற்போது அமைக்கப்பட்டுள்ள ஊதிய குறை தீர்க்கும் பிரிவு குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அரசாணை 71 இல் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறும் நண்பர்களுக்கு விளக்கமளிக்க விரும்புகிறோம். அரசாணை 71 இன் வரிகளை பாருங்கள். பத்தி 6  மேலே கூறப்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ஆணைகளினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து சீரமைக்கும் வகையில் அரசு விரிவாக ஆராய்ந்து இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஊதிய விகித மாற்றங்களை செய்து அரசு ஆணையிடுகிறது. 

       அதாவது இணைப்பில் உள்ள பணியிடங்களில் வருவாய்துறை நீங்கலாக மற்ற துறை பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்து அரசாணை 71 வெளியிடப்படுகிறது.  மீண்டும் பத்தி 8  பாருங்கள். மேலே பத்தி 6  இல் மேற்கொள்ளப்பட்ட ஊதிய திருத்தங்களை தொடர்ந்து, பாதிப்பு ஏற்படும் அலுவலர்கள் அரசிடம் மேல் முறையீடு செய்ய  வாய்ப்பளிக்கப்படுகிறது.  எனவே இம்முறையீடுகள் ( அதாவது அரசாணை 71 இன் படி ஊதிய குறைப்பு செய்யப்பட்டவர்களின் முறையீடுகள்) மற்றும் ஏனைய ஊதிய மாற்றத்திற்க்கான முறையீடுகளை பரிசீலித்து  ( அதாவது அரசாணை 71 இல் குறிப்பிடப்படாத துறையினரின் ஏனைய ஊதிய மாற்றத்திற்க்கான முறையீடுகளை) உரிய தீர்வுகள் காணும் பொருட்டு நிதி துறையில் தனியே ஒரு ஊதிய குறை தீர்க்கும் பிரிவு ................................ அமைத்து அரசு ஆணையிடுகிறது.

               எனவே அரசாணை 71 இல் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைத்து ஆணையிடப்பட்டது  இந்த அரசாணையின்படி ஊதிய குறைப்பு செய்யப்பட்டவர்களின் முறையீடுகளை பரிசீலிக்க மட்டும் கிடையாது என்பது தெளிவாகிறது.  இவ்வாறு அமைக்கப்பட்ட பிரிவு செயல்பட 6  பேர் நீதிமன்ற தடையாணை பெற்றனர். அந்த தடையாணை தற்போது நீக்கப்பட்டு மீண்டும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.  அரசாணை 71 இல்  அமைக்கப்பட்ட பிரிவின் பணி தொடர்கிறது.  இதற்கு மேல் விளக்கினால் உங்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை. ஆறாவது ஊதிய குழுவின் முரண்பாடுகள் களையப்படும் என்ற  தேர்தல்  வாக்குறுதிப்படி  மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்  தற்போது இந்த பிரிவின் மூலம் ஊதிய முரண்பாடுகளை நிச்சயமாக சரி செய்வார்கள்.

         நம் அன்பு சகோதரர்கள் சிலர் அரசாணையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், இந்த அரசாணையில் copy to என்ற இடத்தில் கல்வித்துறை என்று இல்லை,  எனவே இது நமக்கு கிடையாது என்றும் அரசாணையில் குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் தான் இது பொருந்தும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்.(All Secretary to Govt என உள்ளது.) இதில் Education Secretary அவர்களும் உள்ளடங்குவார்கள்)  இன்னும் சிலர் நீதிமன்றம் சென்று இந்த பிரிவில் எங்களையும் சேர்க்க உத்தரவிட கேட்க போகிறோம் என்கின்றனர்.  அரசாணையை தெளிவாக படித்தாலே இந்த பேச்சுகளுக்கே இடமிருக்காது.  அவசரம், (அறியாமை என்று கூட சொல்லலாம்,) ஆர்வ மிகுதியால் நீதிமன்றம் சென்றால் அரசாங்கத்திடம் கெட்ட பெயர் எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.  அரசு, குழு அமைத்திருக்கும்போது நீதிமன்றம் சென்றது யார் என்பதற்கு இடைநிலை ஆசிரியர்கள் என்ற பதில் வந்தால் ஒரு சிலரால் அனைத்து இடைநிலை ஆசிரியர் சமுதாயத்திற்கும் அவப்பெயரும் பாதிப்பும் ஏற்படலாம்.

  ஒரு நபர் குழுவில் இல்லாத ஒரு வாய்ப்பு இந்த பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது OMC  இல்  INDIVIDUAL REPRESENTATION   கிடையாது.  ஆனால் தற்போது individual representation  வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  எனவே ஒவ்வொருவரும் கோரிக்கை மனு அனுப்புங்கள். நீதிமன்றம் செல்லும் எண்ணங்களை விட்டுவிட்டு  அரசாணையை கொஞ்சம் ஆழ்ந்து படியுங்கள். நல்லது நடக்கும் நேரம் நெருங்கி வரும்போது தடையாக  இருந்துவிடாதீர்கள். இந்த களம் யாரையும் விமர்சனம் செய்வதற்கு அல்ல. நம் ஆசிரியர் சமுதாயத்திற்கு அரசாணைகளின் உண்மைகளை விளக்கவும் நன்மை பெறச் செய்வதுமே ஆகும்.

PUBLIC DEPARTMENT G.O.229 DATE : 22.01.1974

 அறிந்து கொள்ள வேண்டிய அரசாணை.

      இந்த அரசாணையில் சங்க அங்கீகாரம் வழங்கும் நிபந்தனைகளில் 
 (C)  No person, who is not a government servant shall be connected with the affairs of the service association என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது  சங்க விவகாரங்களில்  அரசு ஊழியர் அல்லாதவர்களை ஈடுபடுத்தலாகாது என்பதாகும்.

      ஆனால் கல்வி துறையில் ஓய்வு பெற்றவர்கள் தொடர்ந்து சங்கங்களில் தொடர்கின்றனர்.  இந்த அரசாணையை மேற்கோள்காட்டி தமிழ்நாடு  அனைத்து  ஆசிரியர்  சங்கம் (T.A.T.A.)  தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

    இந்த அரசாணையை முழுவதும் படியுங்கள். விழிப்படையுங்கள்.


CLICK HERE TO DOWNLOAD THE G.O.
Tamilnadu All Teacher Association

(T.A.T.A.)


28.2.2012 அன்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு மீதான  நீதிமன்ற தடையை நீக்க  அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்த  செய்தி தொகுப்பை தினத்தந்தி வெளியிட்டிருந்தது.  இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு நீக்க நமது  இயக்கம்  தொடர்ந்து  அக்கறையுடன் செயல்படுவதை உணர்த்த  உங்களின்  பார்வைக்கு  நாளிதழ்  செய்தியினை வெளியிடுகிறோம்.  

நன்றி : தினத்தந்தி

Click here to see the News.

Tamilnadu All Teacher Association (T.A.T.A)

  இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை  தமிழக அரசு மற்றும்  கல்வித்துறையிடம்  விளக்கி மனு அளித்துள்ளது. அப்போது நம் இயக்கம்  சார்பாக  தயாரித்து  அளிக்கப்பட்ட  அட்டவணையை உங்களின்  பார்வைக்கு வெளியிடுகிறோம். 

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் மனு அனுப்ப தயாராவீர்.


Click here to view the Pay Anomaly Table

G.O. for Dearness Allowance 58% to 65% from 01/01/2012


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு                      

 தமிழக அரசு அறிவிப்பு