டிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு.

சென்னை: முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது.

100% தேர்ச்சிக்கு மாணவர்கள் இடைநீக்கம்: பெற்றோர் குற்றச்சாட்டு.

(தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டவேண்டும் என 
அதிகாரிகள் நெருக்கடி மற்றும் தங்கள் பள்ளி அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளி என்ற தோற்றத்தை காட்டவேண்டும் என்ற எண்ணங்களால் ஏற்படும் விளைவு இது. 

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். மாணவன் எவ்வளவு படித்தானோ அவ்வளவு மதிப்பெண் வரும். மதிப்பெண்கள் மட்டுமே  அதிகம் பெற மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆசிரியர்களுக்கு தற்காலத்தில் வழியில்லாத போது, தேர்ச்சி விகிதம் அதிகம் எதிர்பார்ப்பதை பெற்றோர்களும் அதிகாரிகளும் கைவிட வேண்டும்)

சேந்தமங்கலம்: பொது தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்பதற்காக, கல்வியில் பின்தங்கிய மாணவர்களை, அரசு பள்ளி தலைமையாசிரியர் கட்டாய இடைநீக்கம் செய்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பிளஸ் 2: முதல்வரின் தகுதி பரிசுத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தலைமைச்செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்.

சென்னை: தமிழக தலைமைச்செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைச்செயலாளராக இருக்கும் தேவேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, புதிய தலைமைச்செயலாளராக ஷீலாபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

பள்ளிநேரத்தை மாற்றியமைப்பு போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆ‌‌லோசனை.


சென்னை:சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம்,நேற்று முதற்கட்ட ஆ‌‌லோசனையை,போக்குவரத்துதுறை நடத்தியது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட, மாநிலத்தின் மற்ற நகரங்களிலும், நாள் தோறும் வாகன விபத்துகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலியாகி வருகின் றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், அப்பகுதிகளில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து, விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என, கல்வித் துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், கடந்தாண்டு போக்குவரத்து துறை வலியுறுத்தியது.

பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் ஆலோசனை மையம்.

சென்னை: தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மூன்று கோடி ரூபாய் செலவில், நடமாடும் ஆலோசனை மையம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவர்கள் சுற்றுப்புறசூழல், குடும்ப நிலை, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனசோர்வு, மனக்குழப்பம், பாலியல் வன் கொடுமைகள், மதிப்பெண் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவால் கொலை, தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதுடன், உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது.

பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு ஆகியவற்றை அனைத்து அரசு / தனியார் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2013 ஜனவரி மாதத்திற்குள் நடத்தி அறிக்கை சமர்பிக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.Ele.Dir.Pro. 020081/J3/2012 dt.24.12.12.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - மனிதவள மேம்பாட்டு குறியீட்டின்படி பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன. G.O.144 Dated.24.12.2012.அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம்: 
ரயில்வே எச்சரிக்கை.


சேலம்: "ரயில் நிலையங்களில், குப்பை கொட்டுதல், சமைப்பது உள்ளிட்ட, பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படுவோரிடம், 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்' என, தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு.

கன்னிவாடி: இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

விலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க புதிய அணுகுமுறை.

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிகளை மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித்துறை, புது திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம் பயன்படுத்தும் திட்டம், கல்வித்துறையில் விரைவில் அமலாகும் எனத் தெரிகிறது.

புதிய ரேஷன் கார்டு கிடையாது. ஒரு ஆண்டுக்கு உள்தாள் இணைப்பு.

கோவை: ரேஷன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் இணைத்து பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.


பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்: மாண்புமிகு முதல்வர்  ஜெயலலிதா அவர்கள்  உத்தரவு.


பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்: ஜெயலலிதா உத்தரவு

சென்னை, டிச. 23-


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக சிறப்புக் கட்டணம், கற்பிப்புக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகியவற்றை கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால் கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் 1980ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணமாகும். அதன் பிறகு கல்வி நிறுவனங்கள், கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவைகளை உயர்த்தியுள்ள போதிலும், கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் எந்தவித மான மாற்றமும் செய்யப்படாமல், 1980ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. 

கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர்கள் விரைவில் நியமனம்.

சென்னை: பள்ளி கல்வித்துறையில், 1,000இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120தட்டச்சர்கள்விரைவில்ஆன்-லைன்கலந்தாய்வு வழியில்நியமிக்கப்படஉள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில்பள்ளி கல்வித் துறைக்கு,சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள்இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1,000 மற்றும் தட்டச்சர் பணியிடங்கள், 120 ஒதுக்கீடு செய்யப்பட்டனஇதில்,சுருக்கெழுத்தர்கள்சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.

தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு.

காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விபரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்ய வேண்டும், என்ற தேர்வுத்துறை இயக்குனரின் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பழைய முறையில் மாணவமாணவியர் விபரங்களை பதிவு செய்ய அனுமதிக்கவேண்டும்எனவும்  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.இ.டி. வெற்றியாளர்களிடம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு.

சென்னை: சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக ரத்து செய்ய, டி.ஆர்.பி.,யும், அவர்களை வேலையில் இருந்து, டிஸ்மிஸ் செய்வதற்கு, கல்வித்துறையும் முடிவு செய்துள்ளன.

தொடக்கக்கல்வி - 2012 - 13ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவ பாடநூல்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் அரையாண்டு விடுமுறையில் விநியோகிக்கப்பட்டு பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு கிடைக்குமாறு செய்ய உத்தரவு. ந.க.எண். 270805/கே 3/2012. நாள்.21.12.12


தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான 21 அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் 26.12.2012 அன்று நடைபெறவுள்ளது.


10ம் வகுப்பு தேர்வெழுதுவோர் விபரங்களை இணையத்தில் பதிய உத்தரவு.

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு, மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிகிறது. இந்த தேர்வை, 10.5 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரி சீருடை.

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தொடக்கக் கல்வி பாடத் திட்டத்தில், ஜாதியற்ற சமூகம் தொடர்பான பாடமும், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், சைபர் கிரைம் குறித்த பாடமும் சேர்க்கப்படும் என்றார்.

20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி.

சென்னை: புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 242 December 18, 2012.
காலாவதியான 2 விண்வெளி ஓடங்கள் நிலவில் மோதிய இடத்துக்கு அமெரிக்க வீராங்கனை பெயர்.

 டிச. 18-

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது.   இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின.
பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது: 206 உறுப்பினர்கள் ஆதரவு.


புதுடெல்லி, டிச. 17-
பதவி உயர்வில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா கடந்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யபட்டது. அதன்பின்னர் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களுக்கு ஆதரவாக, உ.பி.யில் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கிலும் ஈடுபட்டனர்.
இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய அரசு சம்மதம் தெரிவித்ததையடுத்து, அதனை நிறைவேற்றுவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா ஒத்துக்கொண்டது.
மக்கள் தொகை பதிவேடுபெயர் பதிவு முகாம்இன்று துவக்கம்.

சேலம்: சேலம் மாநகராட்சியில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் பதிவு செய்வதற்கான முகாம், இன்று (டிச., 15) துவங்குகிறது.சேலம் மாநகராட்சி கமிஷனர் அசோகன் விடுத்துள்ள அறிக்கை:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், பெயர் பதிவு செய்வதற்கான முகாம், இன்று (டிச.,15) துவங்குகிறது.

அரசு பள்ளிகள் பொது தேர்வில் சாதிக்க... கல்வித்துறை அறிவுரை.

ராமநாதபுரம்: "தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார்.

ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: அரசுக்கு நோட்டீஸ். "நியமனங்கள் எதுவும்ரிட் மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, "முதல் பெஞ்ச்"உத்தரவிட்டது.

சென்னை: டிசம்பர் 14,2012,08:
  பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படிஅரசுக்கு, "முதல் பெஞ்ச்"உத்தரவிட்டது. "மனு மீதானஇறுதி உத்தரவைப் பொறுத்து,நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்தவழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர்தாக்கல் செய்த மனுஆசிரியர் தகுதிதேர்வில்மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர்கலந்து கொண்டனர்பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களில், 8,808 பேர்தேர்ச்சி பெற்றனர்.
ஆதிவாசி மாணவர்களின் படிப்பிற்காக ஆசிரியர்கள் நடத்தும் டூவீலர் சர்வீஸ்.


தேனி:தேனி மாவட்டத்தில், ஆதிவாசி மாணவர்களை, தினமும் பள்ளிக்கு அழைத்து வர, ஆசிரியர்கள் இருவர் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். பெரியகுளம் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 38 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 21 பேர் வனப்பகுதியில் 5 கி.மீ., தூரம் உள்ள ஆதிவாசி மக்கள் வசிக்கும் செல்லாக்காலனி கிராமத்தை சேர்ந்தவர்கள்.
காலாவதியான 2 விண்வெளி ஓடங்கள் 17-ந்தேதி நிலவில் மோதுகின்றன.காலாவதியான 2 விண்வெளி ஓடங்கள் 17-ந்தேதி நிலவில் மோதுகின்றன

 டிச. 14-
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது.
 
இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின.
 
கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி மாண்புமிகு முதல்வர்  ஜெயலலிதா அவர்கள்  பேச்சு

சென்னை, டிச.13-

கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி ஜெயலலிதா பேச்சு


சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-


ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கற்றவனை கண்ணுடையர் என்றும், கல்லாதவனை புண்ணுடையர் என்றும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர். மெய்யறிவைத் தரக் கூடியது கல்வி என்று சங்க கால நூல்கள் கூறுகின்றன.

தொடக்கக் கல்வி - தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்  பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - 11.12.2012 அன்று காலை 7.30 மணி முதல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்துதல் குறித்து CEO & DEEOகளுக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இயக்குநர் உத்தரவு.தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 27925 / டி1 / 2012, நாள்.08.12.2012.தமிழ்நாடு முழுவதும் பணி நியமனம் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: MCC மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு

கோவை: பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, RSS புரம்

திண்டுக்கல் : OUR Lady மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு
ஈரோடு : வேளாளர் கலைக்கல்லூரி

அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்-03-12-2012

திருச்சி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையால், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2011 நவ., 15ம் தேதி, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,), ஆசிரியர் நியமனத்துக்கு உரிய கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறவேண்டும் என்பதும், குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி-01-12-2012

புதுடில்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.