நன்றி                                   நன்றி                        நன்றி 

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியது உள்ளிட்ட சில காரணங்களினால், சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றிய ஆசிரியர் திரு. இராம்குமார் (T.A.T.A. மாவட்ட செயலாளர்)  அவர்கள் மீது, உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் எடுத்த  நடவடிக்கையான 17 A  யின் கீழ் மூன்றுமாத ஊதிய உயர்வு நிறுத்தம் - தற்போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களால் இரத்து  செய்யப்பட்டுள்ளது. அதன் நகலை உங்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளோம்.

   சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். 

                     
                     
              
திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்தில் இன்று 12.12.13 இல் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க (T.A.T.A.)  கிளை இனிதே தொடக்கம்.

தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) முன்மாதிரி பள்ளி என தினத்தந்தி இளைஞர் மலர் அட்டை படம் மற்றும் பள்ளி தொடர்பான கட்டுரை





இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் வருகிற செவ்வாய்கிழமை உத்தரவு

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்களின் முன்னிலையில் பத்தாவது வழக்காக விசாரணைக்கு வந்தது. ஆசிரியர்கள் சார்பில் வழக்கறிஞ்சர் அஜ்மல் கான் அவர்கள் வாதிட்டார்.
அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது, ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞ்சர் ஏற்கெனவே அரசு தரப்பில் கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் தெளிவாக எடுத்து உரைத்தார், ஆகையால் இனி கால அவகாசம் தர கூடாது என வாதம் எடுத்து வைக்கப்பட்டது. இதையடுத்து வருகிற செவ்வாய்கிழமை அன்று உத்தரவு போடுவதாக நீதியரசர் கூறியுள்ளதாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் திரு.கிப்சன் தெரிவித்தார்.

ஐகோர்ட்டில் 268 பணியிடம்: பிப்., 23ல் எழுத்து தேர்வு.

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், 268 பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பிப்ரவரி 23ல் நடக்கிறது.
பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் 
கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணி
Dec.5
விழுப்புரம் : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று முதல் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
         Photo

படிக்கட்டு பயணத்தைத் தடுக்கும் கருவி: பள்ளி மாணவர் கண்டுபிடிப்புக்குப் பரிசு.

தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 3 பிளஸ் டூ மாணவர்கள், படிக்கட்டில் பயணம் செய்வதைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளனர்.
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு.
சென்னை: சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளிகளுக்கு சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் நடந்த பள்ளி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. ஜனவரி 7ம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கேமரா பொருத்திவிட்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் தெரிவித்து சான்று பெற வேண்டும். பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்புக்கு மாணவர் பாதுகாப்பு பிரிவை உருவாக்க வேண்டும். மாணவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் மாணவர்களை அழைத்து வரும்தனியார் வாகன ஓட்டுகளின் விபரங்களை சேகரிக்கவும் பள்ளி நிர்வாகிகளுக்குபோலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆசிரியர் அரங்கத்தின் நெஞ்சார்ந்த       
                 வாழ்த்துக்கள்.

    இன்று திண்டுக்கல்லில்  www.tntam.com மூலம் கல்வி சேவை செய்துவரும் நமது நண்பர் ஆசிரியர் திரு.சி. கார்த்திக் அவர்களின் திருமணம் சிறப்புற நடைபெற்றது. நண்பரின் திருமண விழாவில் கலந்துகொண்டதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். 

    ஆசிரியர்கள் அனைவரின் சார்பில், மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு அனைத்து ஆசீர்வாதங்களும்  பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.
        

தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு

                                

இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆதிதிராவிடர் கிருத்துவ பெற்றோர்களுக்கு மகனாக/மகளாக பிறந்தஅதாவது பிறப்பால் கிறுத்துவராக இருப்பினும் பின்னாளில் இந்து/சீக்கியம்/புத்த மதங்களுக்கு மாறும் நிலையிலும் மற்றும் பிறப்பால்

இந்து/சீக்கியம்/புத்த மதங்களைத் தழுவும் நிலையிலும் அவர்கள் ஆதிதிராவிடர் சாதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம்

அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

இனிய உதயம் 24.11.2013- ல் திருச்சியில் 

UNION OF TEACHERS ORGANISATIONS - "U" TO.

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு.

    24.11.2013 மாலை 5 மணியளவில் திருச்சி அருண் ஹோட்டலில் ஒருமித்த கருத்துடைய ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்களின் நலன்களுக்காக உழைத்திட ஒன்றுகூடி  தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்கங்கள்:

1.  JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
2.  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்.
3.  ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
4.  தமிழக ஆசிரியர் மன்றம்.
5.  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.

     கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்த இந்த அமைப்பிற்கு " ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு"  - UNION OF TEACHERS ORGANISATIONS என பெயரிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பெயரினை "யூ டூ" - "U" TO என உச்சரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.  

2.  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை  பெறவேண்டும் எனவும், பங்கேற்பு ஓய்வூதியத்தை (CPS) இரத்து செய்ய வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை மட்டுமே  முக்கியப்படுத்தி செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. 

3.  U TO அமைப்பின் மாநில தொடர்பாளராக திரு. சி. ஜெகநாதன் (JSR TESTF)
மற்றும் நிதிக்காப்பாளராக திரு. தே. தயாளன் ( தமிழக ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் சங்கம்) ஆகியோர் செயல்படுவர் என தீர்மானிக்கப்பட்டது. 

4.  ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பில் ஒத்த கருத்துடைய இயக்கங்களை வருங்காலத்தில் சேர்த்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. 

  இக்கூட்டத்தினை தலைவராக திரு.மோகன்தாஸ் (JSR TESTF) அவர்கள் தலைமையேற்று நடத்தினார். 

  நிறைவாக திரு. விவேகானந்தன் அவர்கள் நன்றி கூற கூட்டமைப்பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது.










இடைநிலை ஆசிரியர்களுக்காக புதிய ஆசிரியர் அணி உதயம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கும் மற்றும் புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய  ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த  ஓர் அணியில் திரள இடைநிலை ஆசிரியர்களுக்காக அமைந்துள்ள புதிய  ஆசிரியர் அணி அன்போடு அழைப்பு

இடம்-அருண் ஹோட்டல் -மத்திய பேருந்து நிலையம் அருகில் -திருச்சி 
மாநகரம்

நாள்-ஞாயிற்று க்கிழமை ( 24.11.2013 )-மாலை 5 மணி

பங்கு பெரும் ஆசிரியர் அமைப்புகள் 

சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அட்டை : மத்திய அரசுக்கு நோட்டீஸ்

19 November 2013

ஆதார் அட்டை மூலம் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கும் முறையை செயல்படுத்தவிருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலன் மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு மீது பதில் அளிக்கக் கூறி, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி -இடைநிலைக்கல்வி -அரசு உதவிபெறும் பள்ளிகள் RTE 2009 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத நியமனங்களை இரத்து செய்ய கோருதல்.

விடுமுறை நாட்கள் - மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் ஆணைகள்  வெளியிடப்படுகிறது.


PAY FIXATION, INCREMENT, JUNIOR GETTING MORE PAY,RULE AMENDMENT,ADVANCE INCREMENT, ADDITIONAL PAY, PAY ANOMALY ...போன்றவை பொருள்களில் தகவல்கள் கோர பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பொது தகவல் அலுவலர் பட்டியலினை வெளியிட்டுள்ளதை உங்களின் பார்வைக்கு தகவலுக்காக வெளியிடுகிறோம். (பக்கம் 2 இல் உள்ளது.)


AEEO ASSOCIATION MET ELEMENTARY DIRECTOR TO DISCUSS ABOUT G.O. NO. 179 IMPLEMENTATION.


                 உதவித்  தொடக்கக்  கல்வி அலுவலர் சங்கம் 

13/11/2013 அன்று முற்பகல் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை உதவித்  தொடக்கக் கல்வி அலுவலர் சங்க கெளரவத் தலைவர் திரு.அ.சுந்தரராஜன் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.ச.செளந்தரராசன் மாநிலப் பொருளாளர் திரு. அ.ஆரோக்கியம் மாநிலத் தலைமை நிலையச் செயலர் திரு.இரா.கணேசன்   சாக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ஜெயக்குமார் ஆகியோர்  சந்தித்தனர் . அப்பொழுது அரசானை 179  ஐச் செயல் படுத்துவது சார்பாக எழுந்துள்ள இடர்பாடுகள் பற்றி இயக்குனர் அவர்களிடம் விவாதித்தனர். மேலும் இது தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது கோரிக்கை விவரம் .



    நன்றி            நன்றி          நன்றி 

தொடக்ககல்விதுறை மாநில அளவிலான விடுமுறை வேலைநாள் பட்டியலினை  வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்  சங்கம், மாநில அளவில் விடுமுறை வேலைநாள் பட்டியல் வெளியிடக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. தற்போது எங்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது அறிந்து பெருமிதம் கொள்கிறோம்.

தொடக்ககல்விதுறைக்கும், தமிழக அரசுக்கும் நன்றி கூறுகிறோம்.


தொடக்கக்கல்வி இயக்ககத்தின் சார்பில் 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி.





40% மாணவர்களுக்கு வாசிப்பு திறன் இல்லை: 

"ஆல்-பாஸ்" திட்டத்தால் அவதி.

கோவை: மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் "ஆல்-பாஸ்" திட்டத்தால், 40 சதவீத மாணவர்கள் அடிப்படை வாசிப்பு திறன் கூட இன்றி வகுப்புகளுக்கு வருவதாக உயர்நிலை ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

என்.டி.எஸ். தேர்வில் தமிழக மாணவர்களின் 

நிலை.


மதுரை: "தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,), தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த பத்து ஆண்டுகளாக கவலையளிக்கும் வகையில் உள்ளது" என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அஞ்சலக சேமிப்பு சேர்க்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர தொடக்கக்கல்வி இயக்ககம்உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்ககத்தின் சார்பில் 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடு.



மொகரம் பண்டிகை 14.11.2013 அன்றுக்கு பதிலாக 15.11.2013 மாற்றியமைக்கு அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு வெளியீடு

நீதிபதிகளை மைலார்ட் என அழைக்கலாமா: சுப்ரீம் கோர்ட் விளக்கம்.


புதுடில்லி : கோர்ட்டுகளில் நீதிபதியை மைலார்ட் என வக்கீல்கள் அழைப்பதை தடை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
மொஹரம் விடுமுறையில் மாற்றம்.

சென்னை: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

ஊதிய நிர்ணயம்: முதல்வரிடம் முறையிட ஆசிரியர்கள் முடிவு.

மத்திய அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க கோரி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகப் புள்ளியியல்  துறை முதன்மை செயலருடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் விழா



Thanks & Regards,To Mr. L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master, Chairman Manicka Vasagam School, Devakottai. 9786113160

More Photos will be uploaded soon.

01.01.2006க்கு பிறகு தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தும் ஆசிரியர்களின் தர ஊதியம் ரூ.2800/- என்பது தொடருமேயானால் அவர்களுக்கு 01.01.2011 முதல் தனி ஊதியம் ரூ.750/- பெற தகுதியுண்டு என பள்ளிக்கல்வி மண்டல கணக்கு அலுவலரின் தெளிவுரை

தகுதி அடிப்படையில் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்.

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மொபைல் வேன் 

கவுன்சிலிங்.

விருதுநகர்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், "டீன் ஏஜ்" மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை மேம்படுத்தி, உளவியல் ரீதியாக மாற்றம் கொண்டு வர மொபைல் வேன் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இதற்காக 10 வேன்களை கல்வித்துறை வழங்கி உள்ளது.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எத்தனை 

பேருக்கு அரசு பணி வாய்ப்பு?

சென்னை: டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர் ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.

குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்!

உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம் உங்கள் குழந்தை, கற்றலை நன்கு அனுபவித்து தொடர முடியும்.

உங்கள் குழந்தையின் கற்றலுக்கு உதவக்கூடிய சில முக்கிய வலைதள விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்ததால்,அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு ஓர் ஆசிரியர் விண்ணப்பம்

State-wise List of fake Universities 

மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை

திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள்
குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர்.
மாநில பார்வையாளர்கள் குழு பள்ளிகளை பார்வையிடும் 
போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள்
முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

பிளஸ்–2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றம் புதிய பாடப்புத்தகம் தயாரிக்கும் பணியில் 500 ஆசிரியர்கள்.

பிளஸ்–2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டத்தின் படி புதிய பாடப்புத்தகங்களை 500 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் எழுத உள்ளனர்.
நவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: தமிழக முதல்வர்.

சென்னை: தமிழகத்துடன் குமரி இணைந்த நவம்பர் 1ம் தேதி அரசு விழா கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

குறைந்த செலவில் சமையல் எரிவாயு தயாரிக்கும் திட்டம்: பள்ளி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் பரிசு.

அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி போட்டியில் கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மாணவிகள் உருவாக்கிய குறைந்த செலவில் சமையல் எரிவாயு தயாரிக்கும் திட்ட மாதிரிக்கு முதல் பரிசும், தங்கப்பதக்கங்களும் கிடைத்துள்ளன.

த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்.


எமது தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுசெயலாளர், தலைவர், பொருளாளர் உள்ளிட்ட   ஆசிரியர்கள் திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நேற்று முதல் வெளியிருப்புப் போராட்டம். போராட்டம் இன்றும் தொடர்கிறது.

                               ஊழல்கள் குறித்து தகவல்   கோரியது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுசெயலாளர் அவர்களின் மனைவி, தலைமை ஆசிரியர் பணியிலிருந்து நிரந்தர பணி நீக்கம் செயப்பட்டார்கள். அதனை ரத்து செய்ய கோரியும் மேலும் பணி மாறுதல்களில் ஏற்பட்ட முறைகேடுகளை நீக்க வலியுறுத்தியும் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது. 

நேற்று நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை அதிகாரிகளுடன் நடைபெற்றுள்ளது. 

முழுமையான தீர்வு ஏற்படாததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது. நல்ல தீர்வு ஏற்படும்  என்ற நம்பிக்கையில் போராடும் பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர். 

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 



தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு.


ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை, தாங்களே, அட்டெஸ்ட்செய்து கொள்ளலாம்; - மத்திய மனித வள துறை அனுமதி.

கோபப்படும் மாணவர் சமுதாயத்தை 

நல்வழிப்படுத்த சிறப்புப் பயிற்சி.

தூத்துக்குடி: எதற்கெடுத்தாலும் கோபம் வரக் கூடிய வகையில் மாணவர்கள் மாறி வருவதால் அவர்களுக்கு அந்த கோபத்தை குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்றைய மாணவ, மாணவிகளுக்கு அறிவு வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. அதே அளவிற்கு கோபமும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தினால் பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடந்து விடுகிறது. இதன் மூலம் மாணவ சமுதாயத்தின் மீது ஒருவித களங்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்"


நாமக்கல்: நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.

         தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியை பாராட்டி மத்திய நீர்வளத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சிறப்பாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு "தமிழ்நாடு ஆசிரியர் அரங்கத்தின் சார்பில் பாராட்டுகள்.


அகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த உத்தரவு




Revised Scales of Pay, 2009 – Recommendations of the One Man Commission –Fixation of pay of Junior Assistants / Agricultural Officers etc. selected prior to 1--6--2009 and appointed on or after 1--6--2009 due to administrative reasons –
Allowing of fitment benefit – Orders – Issued.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் 1.6.2009 -க்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டு 1.6.2009 -க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட அரசாணை.



ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

FULBRIGHT விருது: விண்ணப்பிக்க நவ.,20 கடைசி.

தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமெரிக்க ஜக்கிய நாடுகள் மற்றும் இந்திய கல்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த விருதினை வழங்குகின்றது. தகுதியுள்ளவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்கள் மட்டுமின்றி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் நூலக சிறப்பாளர்கள், வழிகாட்டு கவுன்சிலர்கள், பாடத்திட்ட சிறப்பாளர்கள், சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
நவம்பர் 20 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு http://www.usief.org.in/Fellowships/Distinguished-Fulbright-Awards-Teaching-Program.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி - இறந்த அரசு ஊழியரின் வாரிசு நியமனம் குறித்த விதி 30ல் திருத்தம் மேற்கொண்டு தமிழக அரசு உத்தரவு.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டிய நிலையில், முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு மேற்கொண்டால் அதற்கு விதிகளின்ப்படி தக்க ஒழுங்கு நடவடிக்கை தான் எடுக்க வேண்டுமே தவிர ஊக்க ஊதிய உயர்வினை இரத்து செய்ய கூடாது என இயக்குநர் உத்தரவு. (1999 - இல் வெளியான உத்தரவு நகல்.)

உயர்க்கல்வி - மதுரை காமராஜர் பல்கலைகழகத்தால் வழங்கப்படும் பி.ஏ., ஆங்கிலம் (தொழிற்கல்வி) பட்டமானது, பி.ஏ., ஆங்கில (இலக்கியம்) பட்டத்திற்கு இணையானது என தமிழக அரசு உத்தரவு.

       

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு "UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS & PROJECTS" என்ற தலைப்பில் 05.10.2013 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 12.10.2013 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு.

ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் - ஐகோர்ட்டு உத்தரவு

Photo
ரயில்வே போலீஸ் நிலையங்களில் இணையதளம் மூலம் புகார் செய்யலாம்.

சென்னை: இணையதளம் மூலம், ரயில்வே போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்யும் வசதி, நாட்டிலேயே முதல் முறையாக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மார்க்சீட் வழங்க லஞ்சம்: பள்ளி ஊழியர் கைது.

புதுக்கோட்டை: முன்னாள் மாணவரிடம் டிசி., மார்க்சீட் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை :

உச்ச நீதிமன்றம்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால், அதை தவிர்க்க கைபேசியை அணைத்து வைக்க இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்

வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
தேர்தல் அதிகாரி தகவல்.

சென்னை, செப்.21


வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படுமா?

மதுரை: தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15.



 படித்ததில் பிடித்த வாழ்வியல் தத்துவம்.

   " ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே. உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கபட்டிருப்பான்.

   அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன், உன்னிடத்தில் வந்து: இவனுக்கு இடங்கொடு என்பான். அப்பொழுது நீ வெட்கத்தோடு தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.

   நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து, சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக    உனக்குக் கனமுண்டாகும்.

   தன்னைத்தான்   உயர்த்துகிறவனெவனும்    தாழ்த்தப்படுவான். தன்னைத்தான்   தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்."



தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

தேசிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (செப்.17) முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
 அரசுத் தேர்வுகள் துறையின்
www.tndge.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை அவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
ஒவ்வொரு பள்ளிக்குமான பாஸ்வேர்டை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என, அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.