கவர்னர் ரோசய்யா உரையுடன் தமிழக சட்டசபை நாளை1.2.13. கூடுகிறது.

சென்னை:தமிழக சட்டசபையின் இந்தாண்டிற்கான முதல் கூட்டம், கவர்னர் உரையுடன், நாளை துவங்குகிறது. தமிழக சட்டசபையின், ஆண்டு முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். தொடர்ந்து, பிப்ரவரி இறுதி அல்லது, மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பள்ளி கல்வி சான்றிதழுக்கு உண்மை சான்றளிக்க தாமதம் செய்வதாக புகார்.

மருத்துவம், பொறியியல், செவிலியர், கல்வியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்களின் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மை சான்றளிப்புக்கு, பள்ளிக் கல்வி தேர்வுத் துறையில் அலைக்கழிப்பு செய்வதால், இந்த மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

சென்னை பல்கலை: தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு.

31.1.2013. சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தின் கீழ் பல்வேறு படிப்புகளில் சேர சேர்க்கை அறிவிப்பி வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு.

சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், இன்று, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

5 பள்ளிகளை மூட முடிவு: 10 பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி.

திருவாடானை: பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சமச்சீர் கல்வி வந்த பின் மெட்ரிக் இயக்குனரகம் தேவையா?

சென்னை: மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை.

 "தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன், மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது" என, அரசு உத்தரவிட்டுள்ளது. மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால், சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
TNPSC HAS RELEASED ITS ANNUAL RECRUITMENT PLANNER  FOR 2013 -14.

CLICK HERE TO DOWNLOAD THE ANNUAL PLANNER 

Department of Treasures and Accounts has released PayRoll Software New Version 9.

CLICK HERE
ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவி: அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்.

தியாகதுருகம்:சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை தியாகதுருகம் அருகே உள்ள, தொடக்கப்பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

மாணவர்களே தாழ்வு மனப்பான்மை உள்ளவரா நீங்கள்?

பெரும்பாலான மாணவர்கள் தன்னை பற்றி மனதில் நான் இப்படி தான்? எனக்கு திறமையில்லை? என்னால் முடியாது? .... என்ற தாழ்வான கருத்து மனதில் ஆழமாக பதிந்திருக்கும். அவ்வாறு நினைப்பது நம் முன்னேற்றத்திற்கு தடை போடும் முட்டுகட்டைகளாகும். தம்மால் அனைத்தும் சாதிக்க முடியும்....என்ற உயர்வான எண்ணங்களை எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் அடைய விரும்பும் இலக்கை சுலபமாக எட்ட முடியும்.
தாழ்வு மனப்பான்மை நீக்கும் வழிகள்:
திட்டமிட்டபடி கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தலாம் : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு.


சென்னை: தமிழகத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

புதிய கட்டண நிர்ணயம்: 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்.


புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 536 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. தனியார் பள்ளிகளிடம் பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விசாரணை தொடங்கும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளொன்றுக்கு 40 பள்ளிகள் வீதம் நேரில் விசாரணை நடத்தி, கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு.

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள், 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் செப்., 5ம் தேதி, டில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்- லைன் பதிவு: இணையதள மையங்களில் குவியும் தலைமையாசிரியர்கள்.

சென்னை: ஸ்மார்ட் கார்டு பணிகளுக்காக, மாணவர்களின் விவரங்களை, ஆன்-லைனில் பதிவு செய்ய, தனியார் இணையதள மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். ஆன்-லைன் பதிவிற்கு மாணவர்களிடம் தலா, 10 ரூபாய் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை.

சென்னை: சாட்டை திரைப்படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித கிலியை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு.
இவர், கடந்த 8 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.
மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற்று இடைநிலை ஆசிரியர்களாக பிற மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

         மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால்  மேற்காண் வகையில் நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன், மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களிடமும், மதிப்புமிகு. பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களிடமும் கோரிக்கை மனுக்கள் அனுப்ப தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இங்கே வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவினை பதிவிறக்கம் செய்து உங்கள் முகவரி மற்றும் உங்களைப் பற்றிய விவரங்களை காலி இடத்தில் நிரப்பி கையொப்பமிட்டு பதிவு தபாலில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

CLICK HERE TO DOWNLOAD THE REQUEST LETTER 
ஒரேயொரு மாணவிக்கு இரு ஆசிரியர்கள்: அரசு பள்ளி மூடல் எப்போது?

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, டி.கிளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒரேயொரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்காக, தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.

ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் விளக்கமளிக்கும் இணையதளம்.

ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்க ஓர் இணையதளம் உள்ளது. இந்த இணையதளம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் ஒரு சொல்லைத் தேர்வு செய்து,
Tamil Nadu Government Pensioners Health Fund Scheme, 1995 – Orders on approval of Registered 
Private Hospitals with effect from 01.04.2005 issued – Amendment – Issued. 

Click Here - G.O No. 18 
Dt : January 10, 2013
தமிழக சட்டசபை பிப்.1ம் தேதி துவங்குகிறது.


சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 1ம் தேதி துவங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.


250 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம்: கல்வித்துறை யோசனை.

சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை: பிப்ரவரியில் சிறப்பு முகாம்.

சென்னை: அரசு பள்ளி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, பல் சம்பந்தமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்களுக்கு, பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க, சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த, 2011ம் ஆண்டு, மாவட்டத்திற்கு, ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின், மாணவ, மாணவியருக்கு, பொது சுகாதார துறை, பல் பரிசோதனை முகாம் நடத்தியது. அதில், 40 சதவீத மாணவர்களுக்கு, பல் சம்பந்தமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து,

தொடக்கக் கல்வி - உதவி பெறுபவை - தனியார் உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை / சிறுபான்மை அற்ற பள்ளிகள் RTE 2009ன் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே 23.8.2010 பிறகு நியமனம் செய்ய வேண்டும் - தவறான நியமனங்கள் இரத்து   செய்ய உத்தரவு.


CLICK HERE TO DOWNLOAD

தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி மூன்று கட்டங்களாக மொத்தம் 10 நாட்கள் இப்பயிற்சி நடைபெறுகிறது-SCERT.

முதல்கட்ட பயிற்சி  நாள்:-4.2.2013-7.2.2013(நான்கு நாட்கள்)

இரண்டாம்கட்ட பயிற்சி  நாள்:-11.2.2013-14.2.22013(நான்கு நாட்கள் )

மூன்றாம்கட்ட பயிற்சி  நாள்:- 18.2.2013-19.02.2013(இரண்டு நாட்கள்)பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்.,1ம் தேதி துவக்கம்.

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தொடங்கி18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில்  இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு செய்முறை தேர்வு பிப்.,1ம் தேதி முதல் பிப்.,18ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
Directorate of Government Examinations - SSLC MARCH 2013 Examination Time Table.
Click Here to Download

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து  அரசாணை வெளியீடு

DEE PROCEEDING AND GUIDELINES FOR F.T.G FOR AIDED SCHOOLS FOR THE YEAR 2012.
CLICK HERE TO DOWNLOAD
SCIENCE EXPERIMENTS FOR EVERYONE.
அன்பு ஆசிரிய பெருமக்களே உங்களுக்காக  எளிய அறிவியல் 
சோதனைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளோம்.

 ALREADY WE HAVE PUBLISHED THIS ON JULY 24, 2012

இது ஆங்கிலத்தில்  தயாரிக்கப்பட்ட  ஒரு தொகுப்பாகும். எனவே 
இதனை சற்று பொறுமையுடன் படித்து பயன்படுத்துங்கள்.

இதில்  கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனமுடன் பயன்படுத்துங்கள்.
பயன்பெறுங்கள். மாணவர்கள் பயனடைய இது  உதவும் என 
நீங்கள் முடிவு செய்தால் பயன்படுத்துங்கள்.வாழ்த்துகிறோம்.

CLICK HERE TO DOWNLOAD THE  SCIENCE EXPERIMENTS.

CLICK HERE TO DOWNLOAD THE INTRODUCTIONS

ஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து பள்ளி மாணவர்கள்.

காளையார்கோவில்: சிவகங்கை அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளி கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு 2012-2013 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவியருக்கு 1 மற்றும் 2 வகுப்புகளுக்கு விலையில்லா வண்ண கிரையான் மற்றும் 3 முதல் 5 ஆம் வகுப்பு முடிய விலையில்லா வண்ண பென்சில்கள் கொள்முதல் செய்து வழங்குதல் சார்ந்தது.


பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல்

ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் தீர்ப்பு: அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா மகனுடன் கைது.


புதுடெல்லி, ஜன. 16-

இந்திய லோக்தள் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரியாக இவர் பதவி வகித்தபோது 1999 - 2000 ஆண்டுக்கிடையிலான காலகட்டத்தில், சட்ட விரோதமாக 3,206 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதியில் அதிகாரிகள் முறைகேடு.

தேனி: தேனி மாவட்டத்தில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு அனுப்ப ஒதுக்கிய நிதியை, பள்ளிகளுக்கு வழங்காமல், கல்வித்துறை அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க பள்ளிகளுக்கு அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.

எஸ்.எஸ்.ஏ., கலந்தாய்வு கூட்டத்தில்: 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட்.

மதுரை: தமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது. இதுபற்றி தொடக்க கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு மேற்கொள்ளப்படும் என்றார். 
சங்க நிர்வாகிகள் கூறுகையில், "எங்கள் போராட்டம் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. குறைந்தது 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மாணவருக்கு பிரம்படி: தலைமையாசிரியர் இடமாற்றம்.

மதுரை: மதுரையில், மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்களை கண்டிக்காத தலைமை ஆசிரியர், கலெக்டரின் நடவடிக்கையால் தஞ்சைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
 ஊதிய குறைதிர்க்கும் பிரிவு தனது அறிக்கையை  

             அரசிடம் சமர்ப்பிக்கவில்லை 


                      H R A .வில் மாற்றம் இல்லை ,


       அரசு கடித  எண் ;69278/ஊ.கு.தீ.பி./  நாள் ;09.01.2013. 


மைக்ரோசாப்ட் தேர்வு: தமிழக சிறுவன் சாதனை.


கலிபோர்னியா: மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பிரணவ் கல்யாண் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஜூன் மாதத்தில் அடுத்த TET தேர்வு.


அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில் தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: விரைவில் விநியோகம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இமெயில் முறையை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா?இ-மெயில் (E-mail) கண்டுபிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?
14 வயதே நிரம்பிய சிறுவன் வி.ஏ சிவா அய்யா துரை என்பவர் தான் இ-மெயிலை முறையை முதன் முதலில் கண்டறிந்தவர்.
இப்போதெல்லாம் மெயில் வந்துருக்குன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. மெயில் என்றால் இ-மெயில் தான் என்று ஆகிவிட்டது.  பேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டாலும் இமெயில் என்பது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகி விட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும் Inbox, Outbox, Draft. Memo போன்ற அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டுபிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ சிவா அய்யா துரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன். ஆனால் குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினால்,  அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இ-மெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர். 4 வருடம் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முறையாக வி.ஏ சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான இ-மெயில்-ஐ அங்கீகரித்து காப்பிரைட் வழங்கியது. தமிழ் விஞ்ஞானிகள் சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தழிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தி இருக்கிறது.

ஆசிரியர் தரம் என்ன?

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.,) தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இரண்டு பட்டம் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடை.

அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒரே ஆண்டில் இரு பட்டம் பெற்றவர்களுக்கு, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியீடு.


1.4.2011 லிருந்து 31.3.2012 வரையில் ஓர் ஆண்டு முழுவதும் பணியாற்றிய 
பணியாளர்கள் இந்த அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ள மிகை 
ஊதியத்தொகை முழுவதையும் பெற தகுதி உடையவர்களாவர்.

போலியோ சொட்டு மருந்து: அரசு புது உத்தரவு.


சிவகங்கை:போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில், இந்த முறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முதல் கட்ட பணி ஜன.,20லும், 2 வது கட்டமாக ஜன.,24 லும் நடக்கிறது.

பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்ப்பு.

சென்னை: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
துடைப்பத்தால் தாக்கியதில் மாணவரின் கண் பாதிப்பு.

மதுரை : மதுரை அருகே பள்ளியில், மாணவர் ஒருவர் துடைப்பத்தால் தாக்கியதில், மற்றொரு மாணவரின் கண் பாதித்தது. தாக்குவதற்கு தூண்டியதாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், கலெக்டரிடம் நேற்று புகார் அளித்தனர்.

பயிற்சி வகுப்பை புறக்கணித்து அரசை மிரட்டிய ஆசிரியர்கள் - நாளிதழ் செய்திமாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை.

சென்னை: "வரும் கல்வியாண்டில், மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்கக் கல்வி இயக்குனரகம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து, தமிழகம் முழுவதும், சிறப்பு சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
Tamil Nadu State Minorities Commission –
Reconstitution of State Minorities Commission
with Chairman and Members - Notified –
Orders - Issued. G.O Ms. No. 148 


பள்ளி பாட நன்னெறி கல்வி திட்டத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்.

புதுடில்லி: "பள்ளி பாடங்களில்நன்னெறிபுகட்டும் கருத்துகளையும்பெண்களைமதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும்,பாடங்களையும் புகுத்த வேண்டும்" என,மனித வள மேம்பாட்டு துறைக்குபிரதமர்அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

சென்னை: குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
பொங்கல், மிலாதுநபி, குடியரசு தினம்: இந்த மாதம் 13 நாள் அரசு விடுமுறை.

சென்னை, ஜன. 1-
 
தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மட்டும் 13 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
 
இந்த புத்தாண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் தொடங்கி உள்ளது. நிறைய திருவிழாக்களை உள்ளடக்கிய இந்த ஜனவரி மாதத்தில் அவர்களுக்கு 13 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

75 டி.இ.ஓ. பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 75 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

"5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி அவசியம்"

சிவகங்கை: "நாட்டில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, முன்பருவ கல்வி வழங்கினால் மட்டுமே, இளைய சமுதாயம் பக்குவமாக வளரும்," என, மலேசியாவில் நடந்த ஆசியன் பசிபிக் பிராந்திய கூட்டத்தில், இந்திய பிரதிநிதி ஜோசப் சேவியர் பேசினார்.