நன்றி                                   நன்றி                        நன்றி 

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியது உள்ளிட்ட சில காரணங்களினால், சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றிய ஆசிரியர் திரு. இராம்குமார் (T.A.T.A. மாவட்ட செயலாளர்)  அவர்கள் மீது, உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் எடுத்த  நடவடிக்கையான 17 A  யின் கீழ் மூன்றுமாத ஊதிய உயர்வு நிறுத்தம் - தற்போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களால் இரத்து  செய்யப்பட்டுள்ளது. அதன் நகலை உங்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளோம்.

   சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். 

                     
                     
              
திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்தில் இன்று 12.12.13 இல் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க (T.A.T.A.)  கிளை இனிதே தொடக்கம்.

தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) முன்மாதிரி பள்ளி என தினத்தந்தி இளைஞர் மலர் அட்டை படம் மற்றும் பள்ளி தொடர்பான கட்டுரை





இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் வருகிற செவ்வாய்கிழமை உத்தரவு

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்களின் முன்னிலையில் பத்தாவது வழக்காக விசாரணைக்கு வந்தது. ஆசிரியர்கள் சார்பில் வழக்கறிஞ்சர் அஜ்மல் கான் அவர்கள் வாதிட்டார்.
அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது, ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞ்சர் ஏற்கெனவே அரசு தரப்பில் கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் தெளிவாக எடுத்து உரைத்தார், ஆகையால் இனி கால அவகாசம் தர கூடாது என வாதம் எடுத்து வைக்கப்பட்டது. இதையடுத்து வருகிற செவ்வாய்கிழமை அன்று உத்தரவு போடுவதாக நீதியரசர் கூறியுள்ளதாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் திரு.கிப்சன் தெரிவித்தார்.

ஐகோர்ட்டில் 268 பணியிடம்: பிப்., 23ல் எழுத்து தேர்வு.

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், 268 பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பிப்ரவரி 23ல் நடக்கிறது.
பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் 
கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணி
Dec.5
விழுப்புரம் : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று முதல் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
         Photo

படிக்கட்டு பயணத்தைத் தடுக்கும் கருவி: பள்ளி மாணவர் கண்டுபிடிப்புக்குப் பரிசு.

தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 3 பிளஸ் டூ மாணவர்கள், படிக்கட்டில் பயணம் செய்வதைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளனர்.
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு.
சென்னை: சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளிகளுக்கு சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் நடந்த பள்ளி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. ஜனவரி 7ம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கேமரா பொருத்திவிட்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் தெரிவித்து சான்று பெற வேண்டும். பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்புக்கு மாணவர் பாதுகாப்பு பிரிவை உருவாக்க வேண்டும். மாணவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் மாணவர்களை அழைத்து வரும்தனியார் வாகன ஓட்டுகளின் விபரங்களை சேகரிக்கவும் பள்ளி நிர்வாகிகளுக்குபோலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆசிரியர் அரங்கத்தின் நெஞ்சார்ந்த       
                 வாழ்த்துக்கள்.

    இன்று திண்டுக்கல்லில்  www.tntam.com மூலம் கல்வி சேவை செய்துவரும் நமது நண்பர் ஆசிரியர் திரு.சி. கார்த்திக் அவர்களின் திருமணம் சிறப்புற நடைபெற்றது. நண்பரின் திருமண விழாவில் கலந்துகொண்டதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். 

    ஆசிரியர்கள் அனைவரின் சார்பில், மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு அனைத்து ஆசீர்வாதங்களும்  பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.
        

தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு

                                

இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆதிதிராவிடர் கிருத்துவ பெற்றோர்களுக்கு மகனாக/மகளாக பிறந்த, அதாவது பிறப்பால் கிறுத்துவராக இருப்பினும் பின்னாளில் இந்து/சீக்கியம்/புத்த மதங்களுக்கு மாறும் நிலையிலும் மற்றும் பிறப்பால்

இந்து/சீக்கியம்/புத்த மதங்களைத் தழுவும் நிலையிலும் அவர்கள் ஆதிதிராவிடர் சாதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம்

அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

இனிய உதயம் 24.11.2013- ல் திருச்சியில் 

UNION OF TEACHERS ORGANISATIONS - "U" TO.

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு.

    24.11.2013 மாலை 5 மணியளவில் திருச்சி அருண் ஹோட்டலில் ஒருமித்த கருத்துடைய ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்களின் நலன்களுக்காக உழைத்திட ஒன்றுகூடி  தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்கங்கள்:

1.  JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
2.  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்.
3.  ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
4.  தமிழக ஆசிரியர் மன்றம்.
5.  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.

     கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்த இந்த அமைப்பிற்கு " ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு"  - UNION OF TEACHERS ORGANISATIONS என பெயரிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பெயரினை "யூ டூ" - "U" TO என உச்சரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.  

2.  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை  பெறவேண்டும் எனவும், பங்கேற்பு ஓய்வூதியத்தை (CPS) இரத்து செய்ய வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை மட்டுமே  முக்கியப்படுத்தி செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. 

3.  U TO அமைப்பின் மாநில தொடர்பாளராக திரு. சி. ஜெகநாதன் (JSR TESTF)
மற்றும் நிதிக்காப்பாளராக திரு. தே. தயாளன் ( தமிழக ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் சங்கம்) ஆகியோர் செயல்படுவர் என தீர்மானிக்கப்பட்டது. 

4.  ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பில் ஒத்த கருத்துடைய இயக்கங்களை வருங்காலத்தில் சேர்த்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. 

  இக்கூட்டத்தினை தலைவராக திரு.மோகன்தாஸ் (JSR TESTF) அவர்கள் தலைமையேற்று நடத்தினார். 

  நிறைவாக திரு. விவேகானந்தன் அவர்கள் நன்றி கூற கூட்டமைப்பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது.










இடைநிலை ஆசிரியர்களுக்காக புதிய ஆசிரியர் அணி உதயம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கும் மற்றும் புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய  ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த  ஓர் அணியில் திரள இடைநிலை ஆசிரியர்களுக்காக அமைந்துள்ள புதிய  ஆசிரியர் அணி அன்போடு அழைப்பு

இடம்-அருண் ஹோட்டல் -மத்திய பேருந்து நிலையம் அருகில் -திருச்சி 
மாநகரம்

நாள்-ஞாயிற்று க்கிழமை ( 24.11.2013 )-மாலை 5 மணி

பங்கு பெரும் ஆசிரியர் அமைப்புகள் 

சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அட்டை : மத்திய அரசுக்கு நோட்டீஸ்

19 November 2013

ஆதார் அட்டை மூலம் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கும் முறையை செயல்படுத்தவிருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலன் மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு மீது பதில் அளிக்கக் கூறி, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி -இடைநிலைக்கல்வி -அரசு உதவிபெறும் பள்ளிகள் RTE 2009 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத நியமனங்களை இரத்து செய்ய கோருதல்.

விடுமுறை நாட்கள் - மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் ஆணைகள்  வெளியிடப்படுகிறது.


PAY FIXATION, INCREMENT, JUNIOR GETTING MORE PAY,RULE AMENDMENT,ADVANCE INCREMENT, ADDITIONAL PAY, PAY ANOMALY ...போன்றவை பொருள்களில் தகவல்கள் கோர பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பொது தகவல் அலுவலர் பட்டியலினை வெளியிட்டுள்ளதை உங்களின் பார்வைக்கு தகவலுக்காக வெளியிடுகிறோம். (பக்கம் 2 இல் உள்ளது.)


AEEO ASSOCIATION MET ELEMENTARY DIRECTOR TO DISCUSS ABOUT G.O. NO. 179 IMPLEMENTATION.


                 உதவித்  தொடக்கக்  கல்வி அலுவலர் சங்கம் 

13/11/2013 அன்று முற்பகல் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை உதவித்  தொடக்கக் கல்வி அலுவலர் சங்க கெளரவத் தலைவர் திரு.அ.சுந்தரராஜன் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.ச.செளந்தரராசன் மாநிலப் பொருளாளர் திரு. அ.ஆரோக்கியம் மாநிலத் தலைமை நிலையச் செயலர் திரு.இரா.கணேசன்   சாக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ஜெயக்குமார் ஆகியோர்  சந்தித்தனர் . அப்பொழுது அரசானை 179  ஐச் செயல் படுத்துவது சார்பாக எழுந்துள்ள இடர்பாடுகள் பற்றி இயக்குனர் அவர்களிடம் விவாதித்தனர். மேலும் இது தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது கோரிக்கை விவரம் .



    நன்றி            நன்றி          நன்றி 

தொடக்ககல்விதுறை மாநில அளவிலான விடுமுறை வேலைநாள் பட்டியலினை  வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்  சங்கம், மாநில அளவில் விடுமுறை வேலைநாள் பட்டியல் வெளியிடக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. தற்போது எங்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது அறிந்து பெருமிதம் கொள்கிறோம்.

தொடக்ககல்விதுறைக்கும், தமிழக அரசுக்கும் நன்றி கூறுகிறோம்.


தொடக்கக்கல்வி இயக்ககத்தின் சார்பில் 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி.





40% மாணவர்களுக்கு வாசிப்பு திறன் இல்லை: 

"ஆல்-பாஸ்" திட்டத்தால் அவதி.

கோவை: மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் "ஆல்-பாஸ்" திட்டத்தால், 40 சதவீத மாணவர்கள் அடிப்படை வாசிப்பு திறன் கூட இன்றி வகுப்புகளுக்கு வருவதாக உயர்நிலை ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

என்.டி.எஸ். தேர்வில் தமிழக மாணவர்களின் 

நிலை.


மதுரை: "தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,), தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த பத்து ஆண்டுகளாக கவலையளிக்கும் வகையில் உள்ளது" என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அஞ்சலக சேமிப்பு சேர்க்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர தொடக்கக்கல்வி இயக்ககம்உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்ககத்தின் சார்பில் 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடு.



மொகரம் பண்டிகை 14.11.2013 அன்றுக்கு பதிலாக 15.11.2013 மாற்றியமைக்கு அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு வெளியீடு

நீதிபதிகளை மைலார்ட் என அழைக்கலாமா: சுப்ரீம் கோர்ட் விளக்கம்.


புதுடில்லி : கோர்ட்டுகளில் நீதிபதியை மைலார்ட் என வக்கீல்கள் அழைப்பதை தடை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
மொஹரம் விடுமுறையில் மாற்றம்.

சென்னை: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.