முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு.

கன்னிவாடி: இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, ஆசிரியர்பயிற்சி மற்றும் பி.எட்.,முடித்தவர்களுக்கானவேலைவாய்ப்பை உறுதி செய்ய,டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடத்தப்படுகிறது. சிலமாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இத்தேர்வில், பி.எட்., தேர்வுமுடிவிற்காக காத்திருப்போரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.
டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற போதும், பி.எட்., படிப்பிற்கானசான்றுகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பிரச்னைஉருவானது. இதை போக்குவதற்கு, அரசு எடுத்த முயற்சியின்முதற்கட்டமாக, இந்தாண்டு பி.எட்., படிப்போருக்கான தேர்வுகளை,முன்னதாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர்கூறுகையில், "வரும் ஏப்ரலில் தேர்வுகளை நடத்தி, ஜூன் முதல்வாரத்திற்குள் சான்றுகளை வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது.செய்முறைத் தேர்வுகளை, பிப்ரவரி 18ல் துவக்கும் வகையில்ஆயத்தப்படுத்த அறிவுறுத்தல் வந்துள்ளது. முந்தையஆண்டுகளைவிட, இரு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்வுகள்நடத்தப்பட உள்ளன,&'&' என்றார்.

No comments:

Post a Comment