It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - மனிதவள மேம்பாட்டு குறியீட்டின்படி பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன. G.O.144 Dated.24.12.2012.
அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம்:
ரயில்வே எச்சரிக்கை.
ரயில்வே எச்சரிக்கை.
சேலம்: "ரயில் நிலையங்களில், குப்பை கொட்டுதல், சமைப்பது உள்ளிட்ட, பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படுவோரிடம், 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்' என, தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க புதிய அணுகுமுறை.
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிகளை மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித்துறை, புது திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம் பயன்படுத்தும் திட்டம், கல்வித்துறையில் விரைவில் அமலாகும் எனத் தெரிகிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்: மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவு.

சென்னை, டிச. 23-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக சிறப்புக் கட்டணம், கற்பிப்புக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகியவற்றை கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் 1980ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணமாகும். அதன் பிறகு கல்வி நிறுவனங்கள், கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவைகளை உயர்த்தியுள்ள போதிலும், கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் எந்தவித மான மாற்றமும் செய்யப்படாமல், 1980ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர்கள் விரைவில் நியமனம்.
தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு.
காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விபரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்ய வேண்டும், என்ற தேர்வுத்துறை இயக்குனரின் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பழைய முறையில் மாணவ, மாணவியர் விபரங்களை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும், எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டி.இ.டி. வெற்றியாளர்களிடம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு.
சென்னை: சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக ரத்து செய்ய, டி.ஆர்.பி.,யும், அவர்களை வேலையில் இருந்து, டிஸ்மிஸ் செய்வதற்கு, கல்வித்துறையும் முடிவு செய்துள்ளன.
10ம் வகுப்பு தேர்வெழுதுவோர் விபரங்களை இணையத்தில் பதிய உத்தரவு.
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு, மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிகிறது. இந்த தேர்வை, 10.5 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரி சீருடை.
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தொடக்கக் கல்வி பாடத் திட்டத்தில், ஜாதியற்ற சமூகம் தொடர்பான பாடமும், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், சைபர் கிரைம் குறித்த பாடமும் சேர்க்கப்படும் என்றார்.
20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி.
சென்னை: புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 242 December 18, 2012.
காலாவதியான 2 விண்வெளி ஓடங்கள் நிலவில் மோதிய இடத்துக்கு அமெரிக்க வீராங்கனை பெயர்.
டிச. 18-
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது. இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின.
பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது: 206 உறுப்பினர்கள் ஆதரவு.
புதுடெல்லி, டிச. 17-
பதவி உயர்வில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா கடந்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யபட்டது. அதன்பின்னர் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களுக்கு ஆதரவாக, உ.பி.யில் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கிலும் ஈடுபட்டனர்.
இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய அரசு சம்மதம் தெரிவித்ததையடுத்து, அதனை நிறைவேற்றுவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா ஒத்துக்கொண்டது.
மக்கள் தொகை பதிவேடுபெயர் பதிவு முகாம்இன்று துவக்கம்.
சேலம்: சேலம் மாநகராட்சியில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் பதிவு செய்வதற்கான முகாம், இன்று (டிச., 15) துவங்குகிறது.சேலம் மாநகராட்சி கமிஷனர் அசோகன் விடுத்துள்ள அறிக்கை:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், பெயர் பதிவு செய்வதற்கான முகாம், இன்று (டிச.,15) துவங்குகிறது.
ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: அரசுக்கு நோட்டீஸ். " நியமனங்கள் எதுவும், ரிட் மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, " முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.
சென்னை: டிசம்பர் 14,2012,08:
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, " முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது. " மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம். பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர், கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர், தேர்ச்சி பெற்றனர்.
ஆதிவாசி மாணவர்களின் படிப்பிற்காக ஆசிரியர்கள் நடத்தும் டூவீலர் சர்வீஸ்.
தேனி:தேனி மாவட்டத்தில், ஆதிவாசி மாணவர்களை, தினமும் பள்ளிக்கு அழைத்து வர, ஆசிரியர்கள் இருவர் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். பெரியகுளம் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 38 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 21 பேர் வனப்பகுதியில் 5 கி.மீ., தூரம் உள்ள ஆதிவாசி மக்கள் வசிக்கும் செல்லாக்காலனி கிராமத்தை சேர்ந்தவர்கள்.
கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பேச்சு
சென்னை, டிச.13-
ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கற்றவனை கண்ணுடையர் என்றும், கல்லாதவனை புண்ணுடையர் என்றும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர். மெய்யறிவைத் தரக் கூடியது கல்வி என்று சங்க கால நூல்கள் கூறுகின்றன.
சென்னை, டிச.13-
சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கற்றவனை கண்ணுடையர் என்றும், கல்லாதவனை புண்ணுடையர் என்றும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர். மெய்யறிவைத் தரக் கூடியது கல்வி என்று சங்க கால நூல்கள் கூறுகின்றன.
தொடக்கக் கல்வி - தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - 11.12.2012 அன்று காலை 7.30 மணி முதல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்துதல் குறித்து CEO & DEEOகளுக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இயக்குநர் உத்தரவு.தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 27925 / டி1 / 2012, நாள்.08.12.2012.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்-03-12-2012
திருச்சி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையால், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2011 நவ., 15ம் தேதி, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,), ஆசிரியர் நியமனத்துக்கு உரிய கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறவேண்டும் என்பதும், குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)