முறையற்ற முறையில் ஆதாரங்கள்
ஏற்கலாம் என்கிறது சுப்ரீம் கோர்ட்.
ஏற்கலாம் என்கிறது சுப்ரீம் கோர்ட்.
புதுடில்லி: "முறைகேடான வகையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும், வழக்கு விசாரணையில் சாட்சியங்களாக ஏற்றுக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்கு விசாரணைகளில், உரையாடல்களின் டேப் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சில வழக்குகளில், சட்ட விதிமுறைகளுக்கு மாறாக, மறைமுகமான வகையில், இவ்வகை ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட விதம் சட்ட விரோதமான முறையாக இருந்தாலும், வழக்கில் அந்த ஆதாரங்கள் முக்கியமாக தேவைப்பட்டால், அவற்றை விசாரணையில் முக்கிய சாட்சியாக ஏற்றுக் கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.
"எந்த முறையில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன என்பதை விட, அதில் எந்த அளவு உண்மைத் தன்மை உள்ளது என்பதே முக்கியம். இதனால், சட்ட விரோதமான முறையில் ஆதாரங்கள் திரட்டப்பட்டாலும், உண்மைத் தன்மை இருப்பின் அவை சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும்' என, நீதிபதி பி.எஸ். சவுகான் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், நேற்று உத்தரவிட்டது.
No comments:
Post a Comment