அறிந்துகொள்வோம்.
எவரெஸ்ட் சிகரத்தில் டென்சிங், ஹில்லரி: இமயமலையில் உள்ள 29,118 அடி உயர சிகரம் எவரெஸ்ட்.
இமய மலையை அளவிடும் பணியைச் செய்த இங்கிலாந்து `சர்வே, நிபுணர் ஜார்ஜ் எவரெஸ்ட் நினைவாக, சிகரத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. பனியால் உறைந்த இமய மலையில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி செய்தவர்கள் பலர். அவர்களில் பெரும்பாலோர் நடுவழியிலேயே திரும்பினார்கள். மீதி பேர், குளிர் தாங்காமல் இறந்து போனார்கள்.
இச்சிகரத்தை மனிதன் வெற்றி கொண்ட நிகழ்ச்சி, 1953-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி நிகழ்ந்தது. இச்சாதனையை நிகழ்த்தியவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் (வயது 39) மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லரி (வயது 34). டென்சிங் 1914 மே மாதம் நேபாளத்தில் பிறந்தவர்.