17ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு.


சென்னை: டி.இ.டி., தேர்வு வரும் 17 மற்றும் 18ம் தேதி அன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதனையடுத்து வரும் சனிக்கிழமை சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார்.

CLICK HERE TO DOWNLOAD
Click Here

திருச்சி மாவட்ட ஊராட்சி / நகராட்சி  தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலை மற்றும் விடுமுறை நாள்களின் பட்டியல்.

CLICK HERE TO DOWNLOAD

அறிவியல் புத்தாக்க விருதுக்கான கண்காட்சி 407 பள்ளிகள் பங்கேற்பு.

13 Aug.

அறிவியல் புத்தாக்க விருதுக்கான கண்காட்சி திருச்சி மாவட்ட அளவில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 407 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
  ஜான் வெஸ்ட்ரி பள்ளியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, திருச்சி மாவட்டம் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநிலத்தில் 12-ம் இடத்திலிருந்து தற்போது 4-ம் இடத்துக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 14-ம் இடத்திலிருந்து 7ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
  மேலும், இந்தக் கண்காட்சிக்காக ஒரு பள்ளிக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 20.35 லட்சத்தை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி வழங்கியுள்ளதாகவும் மனோகரன் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: பள்ளி நிர்வாகங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை.

மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் படித்த மூன்றரை வயது மாணவன் சில நாள்களுக்கு முன் பணத்துக்காக கடத்தப்பட்டான். காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் அந்த மாணவன் மீட்கப்பட்டான்.
இந்தச் சம்பவத்துக்கு பின்னர் பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை வலியுறுத்தி வருகிறது.
தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்க்க மனு அனுப்புங்க.

சட்டசபை மனுக்கள் குழு அழைப்பு.

திருச்சி .ஆகஸ்ட்.11. நாளிதழ் செய்தி.

பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சனைகள் குறித்து சட்டசபை மனுக்கள் குழுவுக்கு மனு அனுப்பலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன்  அறிக்கை: தமிழ்நாடு சட்டசபை மனுக்கள் குழு விரைவில் திருச்சியில் கூடுகிறது. திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்படவேண்டிய பொதுப்பிரச்சனைகள், குறைகள் குறித்த மனுக்களை அனுப்பலாம்.

மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் இடைநிலை ஆசிரியரின் ஒரு மாத இழப்பு

மத்திய அரசு ஊதியம்:

அடிப்படை ஊதியம் : 9300
தர ஊதியம் : 4200
அகவிலைப்படி (80%) : 10800

மொத்தம் : 24300

தமிழ்நாடு ஊதியம்:

அடிப்படை ஊதியம் : 5200
தர ஊதியம் : 2800
தனி ஊதியம் : 750
அகவிலைப்படி (80%) : 7000 

மொத்தம் : 15750 

ஒரு மாத இழப்பு : 8550/-

இது இந்த மாதத்தில் பணியில் சேர்ந்தவருக்கான ஒரு மாதிரி கணக்கீடு தான் . பணியில் உள்ளோருக்கு இன்னும் இழப்பு அதிகம். சங்கங்கள் தாண்டி அனைவரும் ஒன்றினைந்து போராடினால் மட்டுமே 9300+4200 தர ஊதியம் என்ற இலக்கை அடைய முடியும்.

நன்றி : www.tnkalvi.com


"கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க 

வேண்டும்"

சென்னை: தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் உக்கிரபாண்டி வரவேற்றார். பிரசார செயலாளர் சுரேஷ், துணை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

 இணையவழி கல்விசேவை 


தொகுப்பு: உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்க இணையம்.

ஆசிரியர் அரங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.  


கல்வி பணியில் கணினியை கொண்டு  கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும்  பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBOOK , BLOG என்று அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்துக்கின்றமைக்கு கல்வி துறையில் நானும் ஒரு அங்கம் என்ற வகையில் மகிழ்ச்சியை பகிரிந்துகொள்கிறேன் 

எதிர் வரும் காலங்களில் மாணவர் கல்வி சார்ந்த கற்றல் கற்பித்தல் அனுபவங்களை கூடுதலாக சேர்க்கப் பாடுபடுவோம்   

கல்வி சார்ந்த வலை தளங்கள் ....
1. www.kalvisolai.com
2.www.tnkalvi.com
3.www.teachertn.com
4.www.tamilnaduasiriyar.com
5.www.padasali.nat.
6.www.mptnptf.blogspot.com
7.www.tnptfvirndhunagar.blogspot.in
8.www.chennaitnptf.blogspot.in
9.www.sstaweb,blogspot.in
10.www.asiriyarkudumbam.blogspot.in
11.www.tntam.blogspot.com.
12.www.tnasiriyararangam.blogspot..com
13.www.tamilagaasiriyar.com
14.www.taakkootani.blogspot.in
15.www.testfnagai.blogspot.in
16.www.voiceoftata.blogspot.com.
17.www.testfinkilvelur.blogspot.in
18.www.tnstfcuddalore.blogspot.in.
19.www.teachersalem.blogspot.in
20.www.arivomarasanaigal.blogspot.com.
21.www.aeeoassociation.blogspot.in


facebook
tnkalvl
sstateachers
asiriyarkural
tamilagaasiriyar
teacherskottanikrishnagiri
murugaselvarajan
ramasamy
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஸ்ரீவில்லிப்புத்தூர் 
ஜனநாயகம் ஜனநாயகம்   

நான் தொகுத்ததில் விடுபட்ட BLOG இருந்தால்  உடனே என்னுடைய E.Mail க்கு தெரிவிக்கவும் 
aeeoganesan@gmail.com
9750982287





மெளலானா ஆசாத் கல்விஉதவித் தொகை பெற அழைப்பு.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் ஏழை எளிய சிறுபான்மையின மாணவிகள்,  மத்திய அரசின் மெüலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்  என மாவட்ட ஆட்சியர்  அழைப்பு விடுத்துள்ளார்.
  இஸ்லாமியர், சீக்கியர்கள், புத்த மற்றும்   பார்சி ஆகிய சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ரூ. 12 ஆயிரம் இரு தவணைகளாக வழங்கப்படுகிறது.

T.E.T.திண்டிவனத்தில் முதல் தாள்; திருநெல்வேலியில் இரண்டாம் தாள்.


செஞ்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செஞ்சி மாணவி ஒருவருக்கு, முதல் தாள் தேர்வு திண்டிவனத்திலும், இரண்டாம் நாள் தேர்வு திருநெல்வேலியிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநிலப் பொறுப்பாளர்கள் இயக்குனருடன் சந்திப்பு.



  உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநிலப் பொறுப்பாளர்கள் கௌரவத் தலைவர் திரு அ.சுந்தரராஜன்,தலைவர்   திரு மு.அய்யாசாமி, பொதுச் செயலாளர்  திரு.ச,சௌந்தரராஜன், பொருளாளர்   திரு. அ.ஆரோக்கியம்,  தலைமை நிலைய செயலாளர் திரு.இரா.கணேசன்., திருச்சி மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  அருளானந்தம் ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர். ரெ.இளங்கோவன் அவர்களை 07.08.2013 அன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிகளில்ஆசிரியர்கள்  காலம் தவறாது வருகை புரிய  உரிய நடவடிக்கைகளை  உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ONE MAN COMMISSION REPORT பக்கங்கள் சிலவற்றை உங்கள்    பார்வைக்கு வெளியிடுகிறோம். 

பள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு. G.O. 118, dated 10.07.2013.


IGNOU - JUNE 2013 EXAM RESULT RELEASED.

இடைநிலை ஆசிரியர்களில் புதிய நியமனதாரர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை விளக்கும் கட்டுரை.

மறு பதிவு.

 

ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக  நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.

தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான  D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி  அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A  அரசாணை  வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய ஊதிய விகிதமே  இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

         BASIC PAY                          =       4500
         DEARNESS PAY (D.P)        =       2250
         D.A. 166%                             =     11205
                                                           ___________
         TOTAL                                          17955
                                                           ____________
         (D.A. நிதித்துறை அரசாணை  258 நாள்.14.5.2013 இன் படி)

ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

           BASIC                                 =      5200
           GRADE PAY                       =      2800
           P.P.                                    =        750
           D.A. 80%                             =      7000
                                                              _________
           TOTAL                                        15750
                                                              __________


ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு 

                              17955 - 15750 = 2205

எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A. அரசாணை  வெளியிடப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை எங்கள் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A.) 
தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று வருகிறது. வேறு எந்த சங்கமும் இந்த அளவிற்கு பாதிப்பை குறிப்பிட்டு கோரிக்கை வைத்ததாக தெரியவில்லை. 
எங்கள் சங்கம் மூத்த ஆசிரியர்களுக்கோ அல்லது ஒய்வு பெற்றவர்களுக்கோ எதிரானது அல்ல. அவர்களின் பணி, பெற்றுகொடுத்த பயன்கள் மறுக்கவோ, மறக்கவோ, முடியாதவைகள். இருப்பினும் பணியாளர் சங்கங்களில் பணியில் இருப்போரே அங்கமும், பொறுப்பும் வகிக்க வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்.

இதனை இங்கு ஏன்  குறிப்பிடுகிறேன் என்றால்,முற்றிலும் பணியில் இருப்போரை கொண்டதாக சங்கங்கள் இருந்திருந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பை அரசுக்கு  தெரியப்படுத்தி பாதிப்பை சரிசெய்திருக்கலாம். 

இடைநிலை ஆசிரியர் சமுதாய தோழர்களே  சிந்தியுங்கள். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

                                           

மாண்புமிகு முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகைத் திட்டம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் BC / MBC / DNC / சிறுபான்மையர் மாணவ / மாணவியர்களில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெரும் மாணவர்களுக்கு ரூ.3000/- அவர்களின் உயர்கல்விக்காக வழங்க முதல்வர் உத்தரவு.

இன்று (8.8.2013) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தினம் (1942)

பெருமிதம் கொள்வோம். சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடுவோம். சுதந்திரம் பெற்ற வரலாறுகளை மாணவர்களுக்கு சொல்லுவோம்.

தொடக்ககல்வி - SSA மூலம் 1 முதல் 4 வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல், 6 முதல் 8 வரை படைப்பாற்றல் கல்வி முறையை கண்காணித்து, பள்ளிகளை வகைப்படுத்தி அறிக்கை ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு.


New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme.

Consolidated List of Hospitals covered under the Scheme based on the recommendations of the Committee for empanelment of Hospitals- Notified - Orders Issued. G.O. No.680 Dt.29.7.2013.

தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் மருத்துவமனைகளின் பட்டியலை அங்கீகரித்து தமிழக அரசு உத்தரவு மற்றும் சில மருத்துவமனைகளின் பெயர்கள் நீக்கம்.





அறிவியல் கண்காட்சி ரயில் வரும் 7ம் தேதி வரை, ஜங்ஷன், 7வது பிளாட்ஃபாரத்தில், பொதுமக்கள் பார்வையிடுவதற்காக நிறுத்தப்படுகிறது.

திருச்சி: மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை, ரயில்வே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, விக்ரம் சாராபாய் அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து, நடமாடும் அறிவியல் மற்றும் பல்லுயிர் பெருக்க கண்காட்சி ரயிலை வடிவமைத்துள்ளது.


கடந்த, 2007ம் ஆண்டு முதல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த ரயில் பயணம் மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மாணவ மாணவிகள், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி 

பணியிடங்களை நிரப்ப முடிவு.    

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும்  பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைகள் கணிதத்தில் சிறந்து விளங்க...

சில குழந்தைகள் கணிதப் பாடம் என்றாலே பயந்தோடுவார்கள். மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுக்கும் குழந்தைகள், கணிதத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண்களை எடுப்பர். 
குழந்தைகள் மனதில் பதியும்படி கணிதத்தை வரைப்படம் மூலமாகவோ, விளையாட்டுகளின் மூலமாகவோ சுலபமாக கற்பிக்கலாம். குழந்தைகளின் கணிதத் திறன் அதிகரிக்கும் வகையில் பிரத்யேகமாக ஒரு இணையதளம் உள்ளது.

தேசிய விருது பெறும் 22 தமிழக ஆசிரியர்கள்.

தமிழகத்திலிருந்து 2012- ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் 22 ஆசிரியர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு 8 பெண் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை நேரில் வழங்குகிறார். விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இதுதொடர்பாக விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. விருதுக்கான பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு. 
மதுரையில் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானம்.

   நேற்று 03.08.2013 அன்று மதுரை Y.M.C.A SCHOOL COMPOUND - இல் (T.A.T.A.) தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க கூட்டம் மாநில தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண் ஆசிரியைகள் உட்பட பல்வேறு ஆசிரியர்களுடன் இயக்கப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். 

 கூட்டத்தில் 3 நபர் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கைக்குப் பின்னரும் தீர்க்கப்படாத இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பாதிப்புகள் ஆசிரியர்களுக்கு எடுத்துகூறப்பட்டது. கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு முதல்கட்டமாக உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

 தமிழக அரசின் கவனத்திற்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகள், ஊதிய குறைதீர்க்கும் பிரிவின் அறிக்கையை தொடர்ந்து வெளியிடப்பட்டஅரசானைகளுக்குப் பின்னரும் தொடர்வது குறித்து பொதுசெயலாளர் திரு.கிப்சன் எடுத்து கூறினார். மேலும் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நாம் மேற்கொள்ள இருக்கும் ஜனநாயக முறையிலான உண்ணாவிரதத்திற்கு பெருந்திரளாக ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

இந்த உண்ணாவிரதம் மூலம், 1.1.2009  -க்கு பின்னர் பணியேற்றவர்களை பொருத்தவரையில் ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்பே ஏற்பட்டுள்ளது என்பதையும், அதனை களைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், மேலும் 1.1.2009 - க்கு  முன்னர்   பணியேற்றவர்களை   பொருத்தவரையில்,   ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படாததால் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் பெரும் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதை குறித்தும் விரிவாக விளக்கி பேசி உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

முதல்கட்டமாக உண்ணாவிரதம் 31.8.2013 அன்று திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கு பொறுப்பாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

கூட்டத்தில்  பங்குபெற்ற அனைவருக்கும்  மாநில செய்தி தொடர்பாளர் திரு. கார்கில் ராஜேந்திரன் அவர்கள் நன்றிகூற கூட்டம் நிறைவடைந்தது.



தேசிய கொடியை வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு.


காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் கண்ணன் என்ற கோவிந்த ராஜூலு. முன்னாள் ராணுவ வீரரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தன்று தேசிய கொடி பல இடங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. மிகவும் புனிதமான இந்த கொடியை வியாபார நோக்கில் காதல் சின்னமான இதய வடிவத்திலும், வானவில் போன்றும் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

கனமழை: ஊட்டிக்கு நாளை(2.8.13) விடுமுறை.

ஊட்டி: ஊட்டியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்திருப்பதாவது, கனமழை ‌தொடர்வதால் ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்படாததால் இடைநிலை  ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. 

இது குறித்து கலந்தாலோசிக்க ஆயத்தக் கூட்டம் ஒன்றினை வரும் 03.08.2013 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மதுரை
Y.M.C.A. SCHOOL COMPOUND, NEAR KARIMEDU POLICE STATION, AARAPPALAYAM, MADURAI - யில் நடத்த உள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். வாருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். ஒன்றுபடுவோம். 

பாதிப்பை பற்றி மட்டும் பேசிவிட்டு அமைதியாக இருந்தால் எவ்வித பயனும் இல்லை. ஜனநாயக முறையில் நமது பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.

            ஆயத்தக் கூட்டத்திற்கு 

அனைவரும் வாரீர். அவசியம் வாரீர்.



முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: விடைகள் வெளியீடு.

31 July 2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வாக்குறுதிகளை கவனத்தில் கொள்ளாத ஊதிய குறை தீர்க்கும் பிரிவு. 26.02.2011தினமணி  நாளிதழ் செய்தியில் வெளியான வாக்குறுதியினை ஆசிரியர்கள்  பார்வைக்கு வெளியிடுகிறோம்.  (நன்றி : தினமணி )

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படவில்லை. இச்செய்தி தொகுப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுசெயலாளர், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு FAX மூலம் கோரிக்கை மனு அனுப்பிட உள்ளார்.