தமிழகத்தில், அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும், ஆன் -லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதில், 22 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளன.
கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது: ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டதால், போலி மாணவர் பட்டியலை, தொடர்ந்து கண்டுபிடிக்க முடியாத நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாட்டிக் கொள்ள நேரிடுமோ என்ற பயத்தில், 22 லட்சம் பேரின் விபரங்களை ஆசிரியர்கள் பதிவு செய்யவில்லை. அதே நேரம் ஒரு சில ஆசிரியர்கள், "டபுள் என்ட்ரி' ஆனாலும் பரவாயில்லை என, போலி பட்டியலையும் பதிவு செய்துள்ளனர். இவற்றை சரி செய்யும் போது, இன்னும் பல லட்சம் மாணவர்கள் விடுபடும் நிலை உள்ளது. தனியார் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இப்பிரச்னை இல்லை. தற்போது, இவற்றை சரி செய்ய, மீண்டும் ஒரு வாய்ப்பு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஆன்லைனில் உள்ள விவரங்களை, துல்லியமாக ஏப்ரல், 18ம் தேதிக்குள் சரி பார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இவை நிறைவடையும் நிலையில், பள்ளிகளில் உண்மையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, துல்லியமாக தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment