It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
தொடக்கக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது 2012 - 13ஆம் ஆண்டு டாக்டர் இராதகிருஷ்ணன் விருது - மாவட்ட அளவில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தேர்வுக் குழு அமைத்தல், விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. ந.க.எண். 016965/ஜே2/2013.
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.
AWARD OF CASH INCENTIVE TO THE TAMILNADU GOVT. EMPLOYEES WHO HAVE RENDERED 25 YEARS UNBLEMISHED SERVICE - DELEGATION OF POWERS REG.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
பொதுப் பணிகள் - பல்வேறு பல்கலைகழகங்களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.
Public Services – Equivalence of Degree – various educational qualifications possessed by the candidates as equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders
IGNOU
இந்திராகாந்தி திறந்த நிலைபல்கலைகழகத்தின்
மதுரை மண்டலம் மாற்றம்.
மதுரை மண்டலம் மாற்றம்.
சாத்தான்குளம்:இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறில், நெடில் அறியாத மாணவர்கள். .. தமிழுக்கு வந்த சோதனை.
கோவை: கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குறில், நெடில் சார்ந்த தெளிவின்மையின் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது என்று ஆய்வுப்பணியில் தெரியவந்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து நண்பர்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்திற்கு விளக்கம். (சந்தேகம் போல் தெரியவில்லை. ஆதங்கம் போல் தெரிகிறது)
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படும் போது 4600 + 750 = 5350 ஆகாதா என்று சந்தேகம் + ஆதங்கம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த விளக்கம்.
நிதித்துறை கடித எண்.8764, நாள்.18.4.12. இல் இத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கடிதத்தில் பார்வை 5 - இல் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்திலும் இதற்கான விளக்கம் 19.7.11 இல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில ஒன்றியங்களில் பதவி உயர்வின் போது 3% ஊதிய உயர்வுக்கு மட்டுமே இத்தனி ஊதியம் கணக்கில் கொள்ளப்படுகிறது. அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.
( ஆதங்கப்படுபவர்கள் எல்லோரும் ஆறுதல் அடைந்துகொள்ளுங்கள்.)
சில இடங்களில் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் இத்தனி ஊதியத்தை சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்கின்றனர். (ஆதங்கப்படுகிறவர்கள் மூன்றாவது ஒரு தெளிவுரையை பெற்று இந்த பயனையும் கெடுத்து விடுங்கள். மன நிம்மதி பெறுங்கள்.)
புதிய நியமனதாரர்கள் 1.6.2009 - க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்புதான். பழைய ஊதிய விகிதமே இருந்தால் கூட அவர்களுக்கு, தற்போது பெற்றுவருவதைவிட கூடுதல் ஊதியம் கிடைத்திருக்கும். இதன் விளக்கத்தை மற்றொரு பதிவில் விளக்குகிறேன். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை முன்வைத்து கோரிக்கை மற்றும் போராட்டங்கள் நடத்தி இன்று இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் தேவையானவற்றை பெற்றுவிட்டனர். தற்போது பதவி உயர்வின் போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவது குறித்து சந்தேகம் கேட்பதாக கூறி ஆதங்கத்தை வெளிக்காட்டுவது வேதனையான ஒன்று.
முந்தைய ஊதிய குழுவில் இருந்த தனி ஊதியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் போது 5% தனி ஊதியம் அளிக்கப்பட்டுவந்தது. மற்றும் தேர்வு நிலையின் போது அந்த ஊதிய நிலையில் அமையாத தொகை தனி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து வந்த ஆறாவது ஊதிய குழுவில் இத்தனி ஊதியங்கலெல்லாம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துதான் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது.
இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவதில் எத்தனை கேள்விகள், கணக்குப்பார்த்தல்கள் !!!!!!!
இடைநிலை ஆசிரியர்களே விழிப்படையுங்கள்.
பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்ட விவரம் மதுரை தணிக்கை அலுவலக கடித நகல் மூலம் அறியலாம். இதனை நம் பெரும்பாலான கல்விசார் வலைதளங்கள் வெளியிட்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நன்றி.
NEW S.P.D. FOR S.S.A. TAMILNADU.
திரு.சி.என்.மகேஸ்வரன் I.A.S.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குநர்.
(சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) ஆக பணியாற்றியவர்)
திரு.முஹம்மது அஸ்லாம் I.A.S.
சிறுபான்மையினர் நலத் துறை ஆணையாளர்
(அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குநர் ஆக பணியாற்றியவர்)
வரும் கல்வியாண்டில் அரசு பொதுத்
தேர்வில் மாநில "முதல்' மாணவருக்கு
பரிசு. துறையூர் பள்ளி அதிரடி அறிவிப்பு.
தேர்வில் மாநில "முதல்' மாணவருக்கு
பரிசு. துறையூர் பள்ளி அதிரடி அறிவிப்பு.
துறையூர்: ""வரும் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில், முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு, 15 பவுன் தங்கம், கார் பரிசாகவும், மாணவரின் பெற்றோருக்கு தனியாக, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் பரிசாக வழங்கப்படும்,'' என துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக்., பள்ளி சேர்மன் ராமமூர்த்தி தெரிவித்தார்.
நம் நண்பர்கள் சிலர் அரசாணை 216 பற்றி விளக்கம் கேட்டனர். அவர்களுக்காக அதன் பொருள் சுருக்கம். அத்துடன் ஒரு சிறு விளக்கமும் உங்கள் சிந்தனைக்காக.
G.O. 216 -தொடக்க கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் - 1.6.1988 - க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.88 -க்கு பிந்தைய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல்.
ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய
விதிமுறைகள். ஜூலை 1 முதல் அமல்.
புதுடெல்லி: ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே முழு பணம் கிடைக்கும். இதற்கு முன்பு 24 மணி நேரத்துக்கு முன்னர் வரை கேன்சல் செய்து முழு பணம் பெற்றுக் கொள்ளலாம்.
SMS மூலம் தகவல் அனுப்பும் நம் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்.
பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது.
பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது.
தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் SMS மூலமும் பள்ளி நேரம் மாற்றப்பட்டதாக தகவல் பரவியது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால்,
இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.
பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. எனவே, பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக வெளிவந்த தகவல் தவறானது என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து கட்ட ஆலோசனைக்குப் பின்பே, பள்ளி நேர மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து கட்ட ஆலோசனைக்குப் பின்பே, பள்ளி நேர மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி : புதியதலைமுறை
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ;
இன்று(17.6.13) 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு.
இன்று(17.6.13) 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு.
சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெ., நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார்.
இன்று முதல்வர் ஜெ., தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள்களை ஒழுங்காக திருத்தாத
ஆசிரியர்களுக்கு தண்டனை.
சென்னை: "பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, 17-பி பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.
15.06.13 அனைத்து தலைமையாசிரியர்கள் கூட்டம். தொடக்கக்கல்வித் துறை உத்தரவு.
விலையில்லா பாடநூல்கள் -
விலையில்லா குறிப்பேடுகள் -
விலையில்லா சீருடைகள் - மற்றும்
14.06.2013 தேதிய நிலையில் மாணவர்கள் பதிவு -
விலையில்லா பேருந்து பயணச்சிட்டு பெற தகுதியானவர்கள் உள்ளிட்ட
விபரங்களைக் பெற்றிட வசதியாக நாளை (15.06.13) தமிழகம் முழுவதும்
தலைமையாசிரியர்கள் கூட்டத்தினை நடத்திட தொடக்கக்கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது..
விலையில்லா சீருடைகள் - மற்றும்
14.06.2013 தேதிய நிலையில் மாணவர்கள் பதிவு -
விலையில்லா பேருந்து பயணச்சிட்டு பெற தகுதியானவர்கள் உள்ளிட்ட
Subscribe to:
Posts (Atom)






