நம் நண்பர்கள் சிலர் அரசாணை 216 பற்றி விளக்கம் கேட்டனர். அவர்களுக்காக அதன் பொருள் சுருக்கம். அத்துடன் ஒரு சிறு விளக்கமும் உங்கள் சிந்தனைக்காக.
G.O. 216 -தொடக்க கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் - 1.6.1988 - க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.88 -க்கு பிந்தைய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல்.
------------------------------------------------------------------------------------------------------------
இதனால் ஓய்வு பெற்றவர்களுக்கு பயன் உண்டு. நமக்கு ஒன்றும் பாதிப்பு கிடையாது. இதில் கவனம் செலுத்துவதால் இன்றைய தலைமுறையினரின் ஊதிய பாதிப்பில் அதிக கவனம் செலுத்த அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களுக்குரிய தேவைகளை அவர்கள் நிறைவேற்றிகொள்கிறார்கள்.
நாம் அவர்கள் பின்னால் போய்க்கொண்டு யாரையும் குறை சொல்வது நியாயம் இல்லை.
பணியில் இருந்தோரை அல்ல. முற்றிலும் பணியிலிருப்போரை கொண்டதாக பணியாளர் சங்கங்கள் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment