SMS மூலம் தகவல் அனுப்பும் நம் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்.

பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது. 
தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் SMS மூலமும் பள்ளி நேரம் மாற்றப்பட்டதாக தகவல் பரவியது.


     இதுபோன்ற தகவல்களை இயக்குனரின் செயல்முறைகளை தெளிவாக உறுதிப்படுத்திய பின்னர் செய்திகள் அனுப்புவது பல்வேறு குழப்பங்களை தவிர்க்கும் என்று நம்புகிறோம். 

    விரைந்து செய்திகளை SMS மூலம் அனுப்புகிறோம் என்ற பெயரில் நம்முடைய நம்பகத்தன்மையை நாம் இழந்துவிடக்கூடாது. தற்போது 24 ஆம்தேதி முதல்  பள்ளிநேரம் மாற்றம் குறித்த தகவலை கல்வித்துறை மறுத்துள்ளது.

     நம் வேகத்தையும் ஆர்வத்தையும் பார்த்து 9 மணிக்கு முன்னரே பள்ளி தொடங்குவதற்கு நாம் காரணமாக மாறிவிடக்கூடாது.

      போக்குவரத்து நிலைகள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எங்கு தேவையோ அங்கு மாற்றிக்கொள்ளலாம்.  அனைத்து இடங்களிலும் நேரத்தை மாற்றுவது அனைத்து தரப்பினருக்கும் சிரமம்.

                        நன்றி.




1 comment:

  1. 1.உங்கள் கருத்து சரியே. "தாமதமானாலும் பரவாயில்லை, உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும்" என்பதே நம் கருத்தும் கூட. ஆனால் இந்தப் பிரச்சினை நாளிதழ்களாலும் கல்விசார் வலைத்தளங்களாலும் வந்தது.
    24.6.13 ஆம் தேதி முதல் பள்ளிகள் காலை 9 மணிக்குத் தொடங்கும் என்ற தலைப்பில் கால அட்டவணை தினசரிகளில் வெளிவந்தன. வெப்சைட்களிலும் வெளியிடப்பட்டன. அதனைக் கொண்டே SMS பரவியது. துறைத் தலைவரிடமிருந்து மறுப்புச் செய்தி/தற்காலிக நிறுத்த அறிவிப்பு வந்தவுடன் முதல்நாள் அறிவித்த செய்திக்குத் திருத்த அறிவிப்பை வெப்சைட்கள் வெளியிட்டன. நீங்கள் சொன்னது போல, பெயர் கெட்டுவிடும் என்பதால் தினசரிகள் பொதுவாகத் திருத்த அறிவிப்பை வெளியிடுவதில்லை.
    2.செய்திகளின் உண்மைத்தன்மை என்பது துறைத்தலைவரின் மறுப்பறிக்கை, செய்தி வெளியான 36 மணி நேரம் கழித்து வெளியான பின்பே மாற்றம் அடைந்தது என்பதை நினைவில் கொள்க.அதுவரை தமிழகத்தில் உள்ல அனைது கல்விதுறை உயர்அதிகாரிகள் உட்பட அனைவரும் செய்தி உண்மை என்றே நம்மப்பட்டதை அறிக
    நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

    ReplyDelete