அக். 10ல் சட்டப்பேரவைக் கூட்டம் : 

சபாநாயகராகிறார் தனபால்.


சபாநாயகர் தேர்தலுக்காக தமிழகத்தின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தலுக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் அக்டோபர் 10ம் தேதி நடைபெறும் என்று பேரவைச் செயலாளர் அறிவித்துள்ளது.
28 ஆயிரம் சத்துணவு பணியாளர் நியமனம் ரத்து 
செய்து ஐகோர்ட் அதிரடி.


மதுரை: அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனத்தில், அந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தான், பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பது சட்டவிரோதம். இது, பிறரின் உரிமையை பறிக்கும் செயல். உள்ளூரை சேர்ந்த விண்ணப்பதாரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவு செல்லாது. மாவட்ட வாரியாக தகுதி ஆனவர்களிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும். நியமனங்களை இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஆசிரியர்கள், மாணவர்கள் விவரம் திரட்டுகிறது  பள்ளி கல்வித்துறை.


திருப்பூர்:பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பற்றிய முழு தகவல்களை சேகரித்து, புதிதாக துவக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் வெளியிட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இ.எம்.டி.எஸ்., (எஜூகேஷனல் மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) என்ற திட்டத்தில், தமிழகத்தில் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரிப்பதுடன், பள்ளிகளில் பணியாற்றும் 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்களும் தொகுக்கப்படுகிறது.
TET:  NEXT WEEK HALL TICKET WILL BE ISSUED


ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அடுத்த வாரம் வெளியிடப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற்று கொள்ளலாம் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது





2,600 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை: கல்வித்துறை எச்சரிக்கை

28-09-2012

சென்னை: பள்ளிக்கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் 2,600 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லாததால், இவற்றில் பயிலும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
CCE - CO SCHOLASTIC DRAFT FOR UPPER PRIMARY & PRIMARY




தொடக்கக் கல்வி - கன்னியாகுமரி மண்டலம் - பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் 05.10.2012 அன்று நடைபெறுவது குறித்த இயக்குநர் செயல்முறைகள்

 ந.க.எண். 020081 / ஜெ3 / 2012.


தொடக்கக் கல்வி - சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்துதல் - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் விவரங்கள் 01.06.2012 அன்றைய நிலவரப்படி அனுப்ப உத்தரவு.



அனைவருக்கும் கல்வி இயக்கம் - பயிற்சி கூடத்தில் வைக்கும் பேனர் SCERT மற்றும் SSA இணைந்து நடத்தும் பயிற்சி என குறிப்பிட வேண்டும் இயக்குனர் உத்தரவு.

காலாண்டுத் தேர்வு கேள்வித்தாள்: தனியார் நோட்சில் முன்பே "ரிலீஸ்'


சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வின் கேள்வித்தாள், "சுரா' எனும், தனியாரின் நோட்சில் அச்சு பிசகாமல் இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்.

மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வும், பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வும் அக்டோபர் 14ம் தேதி நடப்பதால், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு  திருச்சி மண்டல அளவில் மாண்புமிகு அமைச்சர், செயலாளர், DEEO / AEEO / AAEEO's கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம்
நடைபெறும் இடம் மற்றும் நாள் மாற்றம் குறித்த இயக்குனரின் செயல்முறைகள். ( 29.9.2012 க்குப் பதிலாக 06.10.2012)

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING
    

குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர், மருத்துவர் உட்பட வட்டார அளவில் 15 பேர் குழு அமைத்து கண்காணிக்க அரசு உத்தரவு.



2012 - 2013ஆம் கல்வியாண்டு முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை CCE - மாலையில் பாடவேளைகள் நிறைவுபெறும் போதுதான் நாட்டுபண் பாடுதல் உட்பட பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்வது குறித்த ஆணை.


சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை.

பரிசு வழங்குவதாக எஸ்.எம்.எஸ்.,
அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்.


ஆத்தூர்: பரிசு விழுந்துள்ளதாக, மொபைல் ஃபோன்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, பணம் பறிக்கும் கும்பலிடம், மொபைல் ஃபோன் உபயோகிப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் கிரைம் போலீஸார், எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றனர்.மொபைல் ஃபோன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, பரிசு மற்றும் விருது வழங்குவதாக, எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர்.
RIGHT TO EDUCATION (RTE)
சார்ந்த தெளிவுரைகள்.

1.   இலவச மற்றும் கட்டாய  கல்வி உரிமைச்சட்டம், 2009.   
       ( மத்திய அரசு வெளியீடு.)
                              Click Here to Download    

2.    RTE Model Rules Under Right to Education Act 2009.
                              Click Here to Download

3.    Right to Education Act, Tamil Version. ( தமிழகத்தில்
        இச்சட்ட வரைவு விதிகள் நிறைவு செய்வதற்கு முன்னர்
        கருத்து கேட்புக்காக வெளியிடப்பட்ட தொகுப்பு)
                              Click Here to Download      

4.    Right to Education 2009, Clarification on Provisions.
                              Click Here to Download

5.   Guidelines regarding deployment of teachers for Elections.
                              Click Here to Download

6.   Central Government authorises NCTE as Academic authority.
                             Click Here to Download 
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


புதுடில்லி: சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பன்முகத்திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

23-09-2012

விருதுநகர்: பள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

கல்விக் கடன் பெற தடையின்மை சான்று தேவையில்லை.

23-09-2012

சிவகங்கை: மாணவர்கள் கல்விக் கடனுக்காக, பிற வங்கிகளில் தடையின்மைச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய பள்ளி.


இப்பள்ளியில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 2010-11-ம் ஆண்டின் கல்வியாண்டு வரை தோரயமாக 39,437 மாணவர்கள் படித்துவருவதாகவும், இந்த கல்வியாண்டி இது 45 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கையை எட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மண்டலத்தில் (9 மாவட்டங்களுக்கு) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசுமுதன்மை செயலாளர் முன்னிலையில் மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் 29.09.2012 அனைத்து கல்வித்துறை அலுவலர்களுடன் நடைபெறுகிறது.


அரசின் கட்டண நிர்ணயம், சி.பி.எஸ்.சி., பள்ளிக்கும் பொருந்தும்.

22-09-2012.

சென்னை: "தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாததால் நடவடிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 2448 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதற்கு 37 பேர் வரவில்லை. எஞ்சிய 2411 பேரில் 202 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, பட்டதாரி பயிற்சிகளை முடிக்கவில்லை. மேலும் பலர் 2 பட்டங்களை பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 14ல் ஆசிரியர் தகுதித் தேர்வு : புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சென்னை, செப். 21 : தமிழகத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வில் புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தேர்வெழுத அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு இப்போதைக்கு இல்லை.


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம், திடீரென அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவே, இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

20.09.2012 பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். பள்ளிகல்வி  துறை அறிவிப்பு.