கல்விக் கடன் பெற தடையின்மை சான்று தேவையில்லை.

23-09-2012

சிவகங்கை: மாணவர்கள் கல்விக் கடனுக்காக, பிற வங்கிகளில் தடையின்மைச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகளில் கல்விக் கடன் வழங்க, நிதி அமைச்சரகம் வலியுறுத்தி வருகிறது. அனைத்துப் படிப்புகளுக்கும், கல்விக் கடன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
கல்விக்கடன் கேட்கும் மாணவர்கள், விண்ணப்பம், உரிய ஆவணங்களுடன், அவர்கள் கடன் வாங்க முன் வரும் அனைத்து நகரங்களில் உள்ள வங்கிகளிலும், "இதற்கு முன், கடன் வாங்க வில்லை. மற்ற கடன்களிலும், நிலுவை இல்லை&' என்ற தடையின்மைச் சான்றை, மேலாளர்களிடம் பெற்று, ஆவணங்களுடன் இணைக்க வேண்டும். ஆனால், இச்சான்றை பெற, மாணவர்கள் போராட வேண்டி உள்ளது.
இப்பிரச்னையைத் தீர்க்க, வரும் காலங்களில், கல்விக் கடன் கேட்கும் மாணவர்களிடம், தடையின்மைச் சான்று பெறத் தேவையில்லை. மாறாக, எந்த வங்கியிலும், கடனும், நிலுவையும் இல்லை என, பெற்றோர் உறுதிமொழிச் சான்று கொடுத்தால், அதை ஆதாரமாக வைத்து, கல்விக் கடன் வழங்க வேண்டும் என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

No comments:

Post a Comment