இன்று முதல் ரயில் பயணக் கட்டணம் 


உயர்வு                                


பயணச் சீட்டு முன்பதிவு மற்றும் சரக்கு கட்டண அதிகரிப்பு திங்கள்கிழமை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது.
இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி பயணக் கட்டணத்தில் மாற்றமில்லை. சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி பயணக் கட்டணம் ரூ. 10 உயரும். ஏசி வகுப்பு பயணக் கட்டணம் ரூ.15 முதல் ரூ. 25 வரை உயரும்.

இரண்டாம் வகுப்பில் தத்கால் மூலமாக முன்பதிவு செய்வதற்கு அடிப்படை பயணக் கட்டணத்தில் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பிற வகுப்புகளுக்கு அடிப்படை பயணக் கட்டணத்தில் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உறுதி செய்யப்பட்ட ஒரு பயணச் சீட்டை ரத்து செய்வதற்கு, வகுப்பை பொருத்து, ரூ. 10 முதல் ரூ. 50 வரை கூடுதலாக வசூலிக்கப்படும். காத்திருப்பில் உள்ள மற்றும் ஆர்ஏசி 2-ஆம் வகுப்பு பயணச் சீட்டை ரத்து செய்யும் எழுத்தர் கட்டணம் ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வகுப்புக்கு ரூ. 10 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர சரக்கு கட்டணமும் சுமார் 5.7 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அனைத்து வித சரக்குகளையும் எடுத்துச் செல்லும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பயணக் கட்டண உயர்வின் மூலம் இந்த ஆண்டு ரூ. 42,210 கோடி வருவாய் ஈட்ட முடியும் என ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. சரக்கு கட்டண உயர்வின் மூலம் ரூ. 93,554 கோடி திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment