பழைய சிடிக்களில் உருவாக்கலாம் போட்டோ பிரேம்.


பழைய சிடிக்களை என்ன செய்வது குப்பையில் தான் தூக்கிப் போட வேண்டும் என்று நினைத்தீர்களா... இல்லை. பழைய சிடிக்களில் நிறைய உபயோகமான பொருட்களை செய்யலாம். அதில் ஒன்றுதான் போட்டோ பிரேம்.

முதலில் உங்களிடம் உள்ள புகைப்படங்களையும், அதற்குத் தேவையான சிடிக்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது இது முழுக்க முழுக்க புகைப்படங்களை பார்வைக்கு உகந்த இடத்தில் வைப்பதற்கு ஏற்ற வழியாகும்.
அடுத்து, சிடிக்களை உங்களுக்கு ஏற்ற வடிவத்தல் ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டிக் கொள்ளுங்கள். அதாவது, நடுவில் ஒரு சிடியை வைத்து சுற்றிலும் 5 அல்லது 6 சிடிக்களை வட்ட வடிவில் ஒன்றன் மீது ஒன்று மிகச் சிறிய அளவில் கம்மை வைத்து ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நீங்கள் போட்டோ பிரேமில் வைக்க எடுத்து வைத்துள்ள புகைப்படங்களை சிடியின் அளவை விட சற்று சிறிதான வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு சிடியின் முன் பக்கத்தில் ஒவ்வொரு சிடியிலும், ஒவ்வொரு புகைப்படங்களை கம்மை வைத்து ஒட்டிக் கொள்ளலாம். பிறகு, ஒன்றோடு ஒன்று சிடி ஒட்டப்பட்டு நன்கு காய்ந்ததும், சிடியின் பின்புறத்தில், ஒரு கயிறை (ஆணியில் மாட்டும் வகையில்) கம்மை வைத்து  ஒட்டி ஹாலில் மாட்டுங்கள். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் நிச்சயமாக உங்கள் படைப்பைப் பார்த்து பாராட்டுவார்கள்.

No comments:

Post a Comment