கனமழை மற்றும் நீலம் புயல் காரணமாக தமிழகத்தில் 20மாவட்டங்களுக்கு இன்று 31.10.12. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை                     - பள்ளி, கல்லூரிகள்
திருவள்ளூர்               - பள்ளி, கல்லூரிகள்
காஞ்சிபுரம்                 - பள்ளி, கல்லூரிகள்
திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்
பெரம்பலூர்                  - பள்ளி, கல்லூரிகள்
தஞ்சை                         - பள்ளி, கல்லூரிகள்
திருவாரூர்                  - பள்ளி, கல்லூரிகள்
கடலூர்                          - பள்ளி, கல்லூரிகள்
நாகை                            - பள்ளி, கல்லூரிகள்
அரியலூர்                     - பள்ளி, கல்லூரிகள் 
விழுப்புரம்                   - பள்ளி, கல்லூரிகள் 
வேலூர்                         - பள்ளி, கல்லூரிகள்
கரூர்                              - பள்ளிகள்
சேலம்                           - பள்ளிகள்
திருச்சி                          - பள்ளிகள்
திண்டுக்கல்                - பள்ளிகள்  
கிருஷ்ணகிரி              - பள்ளிகள் 
புதுக்கோட்டை          - பள்ளிகள்
தருமபுரி                       - பள்ளிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்

பாடநூல் தயாரிப்பு குழு - புதிதாக சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய 10ஆம் வகுப்புக்கான சமூகவியல் முதல் பருவ பாடப்புத்தக செயல்பாடுகளுக்கான ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் பணிமனை 05.11.2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது.அனைவருக்கும் கல்வி இயக்கம் ந.க.எண். 2113 / பாடநூல் தயாரிப்பு / அகஇ / 2012, நாள்.29.10.2012.

விருதுநகர்,அக்.30. பள்ளிக்கு தாமதமாக வந்ததை தட்டி கேட்ட ஆசிரியர் ஒருவரை 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.

டி.இ.டி. தேர்வு முடிவுகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு.

சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்.

சென்னை: அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மாவட்ட அளவிலான விழிப்பு குழு மற்றும் SC / ST பிரிவினருக்கு வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்க மாநிலம் / மாவட்ட அளவிலான விழிப்பு குழு ஏற்படுத்துதல் சார்பு.

குடிநீர், கழிவறை, நூலக வசதிகள் உள்ளதா?: பள்ளிகளை கண்காணிக்க 5 பெண்கள் கொண்ட குழு- தமிழக அரசு உத்தரவு.

சென்னை, அக்.27-
 
பள்ளிக் கூடங்களில் மாணவ- மாணவிகள் எல்லாவித வசதிகளையும் பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிக் கூடங்களை கண்காணிக்க 5 பெண்கள் கொண்ட குழுக்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அரசு பள்ளி ஆசிரியர்கள் "டியூசன்' நடத்த தடை:கல்வித்துறை இணை இயக்குனர் அதிரடி.


சேந்தமங்கலம்: பாடம் நடத்தாமல், வகுப்புக்கு டிமிக்கி கொடுத்த ஆசிரியர் மீது எழுந்த புகாரை தொடர்ந்து, பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், விசாரணை நடத்திய, கல்வித்துறை இணை இயக்குனர் திரு. ராம்ராஜ், "ஆசிரியர்கள் யாரும், இனி டியூசன் எடுக்கக்கூடாது' என, உத்தரவிட்டார்.

T.E.T. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு.

27-10-2012.

சென்னை: டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு(SMC) கூட்டம் மாதம் ஒரு முறை கடைசி வாரம் நடத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 831 / அ2 / SMC / அகஇ / 2011, நாள். 09.2012.


தொடக்கக் கல்வி - மாநில கணக்காயர் தணிக்கை கூட்டமர்வு 15 மற்றும் 16.11.2012 அன்று நடத்துதல் சார்பு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 6019 / சி1 / 2012, நாள்.26.10.2012.


தொடக்கக் கல்வி - RIEST ஆங்கிலப் பயிற்சி - 02.11.2012 முதல் 30.11.2012 முடிய 30 நாட்களுக்கு 75 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்க உத்தரவு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 25981 / K2 / 2012, நாள். 25.10.2012.


கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்.

திருச்சி: போலியோவால் கால்கள் செயலிழந்த கல்லூரி மணவரை, அவரது நண்பர்கள் நாள்தோறும் வீல் சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சியில் நடக்கிறது.

தொடக்கக் கல்வி - விஜயதசமியையொட்டி 2012 அக்டோபர் மாதம் முழுவதுமாக சேர்க்கை மாதமாக அறிவித்து சிறப்பு நடவடிக்கை எடுத்து மாணவர்களை சேர்க்க இயக்குநர் உத்தரவு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 26156 / ஜே3 / 2012, நாள்.22.10.2012.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் காலகெடு அக்டோபர் 31 வரை நீடித்து தமிழக அரசு உத்தரவு.


மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை.

கோவை: மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கனமழை எதிரொலி: சென்னையில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

சென்னை, அக்.19-
 
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மூன்று தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
   சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மாநிலம், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி-அனைத்து CEO/DEEOs கலந்து கொள்ளும் ஆய்வுகூட்டம் 22.10.2012 அன்று சென்னையில் பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்களால் நடத்தவுள்ளது குறித்த இயக்குனரின் செயல்முறைகள்.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 20081 / ஜெ3 / 2012, நாள்.  18.10.2012.



கல்வித்துறையில் தகவல்

மேலாண்மை: டிசம்பரில் ஆன்லைன் முறை.

 தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.


பட்டதாரி ஆசிரியர் விரைவில் நியமனம்.

சென்னை: தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். கடந்த, 2008- 09, 2009- 10, 2010- 11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது.
தொடக்ககல்வி - மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் தேவைப்பட்டியல் கோருதல். தொடக்ககல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்.ந.க.எண்.259611/கே 3/2012. நாள். 9.10.12.






தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் -போட்டோ எடுக்கும் இடங்கள் அறிவிப்பு.

திருச்சி: மாநகராட்சி பகுதியில், தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ, கைரே கை, கண் கருவிழிப்படலம் பதிவு செய்யும் பணி துவங்கும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிக்கை:திருச்சி மாநகராட்சியில் ஒன்று முதல், 60 வார்டுகளில் உள்ள, ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ, கைரேகை பதிவு மற்றும் கண் கருவிழிப்படலம் பதிவுக்கான சிறப்பு முகாம், இன்று துவங்கி, ஜனவரி, 15ம் தேதி வரை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக அக்., 15 முதல், 23ம் தேதி வரை தலா ஒரு வார்டில் இப்பணி நடக்கிறது.

தொடக்கக் கல்வி - மாநில கணக்காயர் தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்வது குறித்து கூட்டமர்வு (JOINT SITTING MEETING) நடத்துதல் சார்பு.தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 6019 / சி1 / 2012, நாள். 12.10.2012.