கனமழை எதிரொலி: சென்னையில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று தெற்கு நோக்கி நகர்ந்து வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இன்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கடலோரப் பகுதி நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்றும் பலத்த மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் உள்பகுதியில் உள்ள மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.
தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக நீடித்து வரும் மழைக்கு இதுவரை 15 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாட்டுக்கு மிக அருகில் உள்ளதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மாநிலம், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்.19-
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மூன்று தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மாநிலம், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று தெற்கு நோக்கி நகர்ந்து வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இன்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கடலோரப் பகுதி நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்றும் பலத்த மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் உள்பகுதியில் உள்ள மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.
தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக நீடித்து வரும் மழைக்கு இதுவரை 15 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாட்டுக்கு மிக அருகில் உள்ளதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மாநிலம், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment