குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

சென்னை: குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

துணை கலெக்டர் பணியிடம் - எட்டு, டி.எஸ்.பி., - நான்கு, வணிகவரித்துறையில், உதவிக் கமிஷனர் - ஏழு, மாவட்ட வேலை வாய்ப்புஅலுவலர் - ஐந்து, மாவட்ட பதிவாளர் - ஒருவர் என, 25பணியிடங்களை நிரப்ப, கடந்த, 30ம் தேதி, முதல்நிலைத் தேர்வுநடைபெறும் என, தேர்வாணையம் அறிவித்திருந்தது. பின்,இம்மாதம், 27ம் தேதிக்கு, தேர்வை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், தேர்வுக்கு, இம்மாதம், 7ம் தேதி வரை, தேர்வாணையஇணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; தேர்வுக் கட்டணத்தை, 9ம்தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment