5 ஆம் வகுப்பு வரை அருமையான பாடத்
திட்டம் 2 நாளில் அமல். தியானம், வழிபாடு, மனவளக்கலையுடன் கொஞ்சம் பாடம்.
ஆசிரியர் அரங்கத்தின் கருத்து.

8.6.13 தினமலர் செய்தி- நன்றி
குறைந்த நேர வகுப்பு, செய்முறை பயிற்சி, தியானம், வழிபாடு, உடற்பயிற்சி, வண்ணம் தீட்டுதல், இசையுடன் பாடுதல் என்ற புதிய கல்விமுறை 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை மறுதினம் முதல் அமல்படுத்தப்படுகிறது. 5 நிமிட பயிற்சி, 10 நிமிட பாடம் என்று பள்ளிகல்வித்துறை எடுக்கும் இந்த அருமையான முயற்சி மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
========================================================================
விளக்கமாக நாளிதழில் படித்துகொள்ளுங்கள் நண்பர்களே. முழுவதையும் பதிவு செய்ய பொறுமையும் இல்லை. விமர்சனம் விரல்களை தடை செய்கிறது.
ஆசிரியர் அரங்கத்தின் கருத்து.
மாணவர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை. இவைகளெல்லாம் மாணவன் இந்த கால போட்டி உலகில் கல்வியறிவு பெற எவ்வகையில் உதவும் என்பதை எண்ணும் போது அச்சமே மிஞ்சுகிறது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. யாராக இருந்தால் என்ன? தன் பிள்ளையை எங்கே படிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்ய பெற்றோருக்கு உரிமையும், பொறுப்பும், கடமையும் உண்டு.
முப்பருவ கல்வி திட்டம் அருமையான ஒன்று. ஆனால் அதனை நடைமுறைப்படுத்திய பின்னரும் ABL அட்டைகளை வைத்து பாடம் நடத்த சொல்வதில் என்ன பயன்? களத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் கருத்துக்களுக்கு முழுமையான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரிவர்களின் கவனமெல்லாம் பள்ளிகளை பற்றியே உள்ளது. ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களின் தரம் உயர்த்துவதில் மட்டும் அவர்கள் கவனம் செலுத்தினால் வருங்கால சிறந்த ஆசிரியர்கள் உருவாவார்கள். தொடக்கப்பள்ளிகளின் தரமும் தானாகவே உயரும்.
TET தேர்ச்சி விகிதம் அனைவரும் அறிந்ததே. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர பலர் தயக்கம் - இதுவும் அறிந்ததே. CCE ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் அதில் உள்ள நடைமுறைகள் இவர்களுக்கும் புரியும். தரமான ஆசிரியர்கள் உருவாக உதவும். இவர்கள் எண்ணங்களில் உதிப்பதை எல்லாம் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் நிலைகளும் மாறும்.
அவரவர் வேலையை அவரவர் செய்தால் அபாயம் ஒன்றுமில்லை. அடுத்தவர் முதுகில் ஏற நினைத்தால் அதனால் வரும் தொல்லை என்ற ABL அட்டை பாடல் அடிக்கடி நினைவுக்கு வருகிறது.
இந்த அட்டைகளை எடுத்துவிட்டு முப்பருவ முறையில் பாட புத்தகங்களை வைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட CCE முறையிலான கல்வியே பயன் தரும்.

No comments:
Post a Comment