65 பேருக்கு உத்தரவு வழங்கல்திருச்சியில் நள்ளிரவு வரை நீடித்த ஆசிரியர் 
இடமாறுதல் கவுன்சலிங்.


திருச்சி: ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, நள்ளிரவு வரை இடமாறுதலுக்கான கவுன்சலிங் திருச்சியில் நடந்தது. இதில், 65 பேருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, சையது முஸ்துஸா மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. இந்த வகையில் நேற்று முன் தினம், ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங் நடந்தது. பள்ளி கல்வித் துறையின் கம்ப்யூட்டர் மூலம், ஆதிதிராவிடர் நலத்துறையினர் கவுன்சலிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இதில், பங்கேற்க 80 ஆசிரியர்கள் பதிவு செய்து, காலை முதல் பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் கவுன்சலிங் துவங்கவில்லை. ஒரு வழியாக இரவு 7 மணிக்கு மேல், கவுன்சலிங்கில் பங்கேற்பவர்களின் மூப்பு பட்டியல் ஒட்டப்பட்டது.இதில், குளறுபடி இருந்ததால், ஆசிரியர்கள் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய பட்டியலை ஒட்டினர். இதன் பின்னர் கவுன்சலிங் துவங்கி, இரவு இரண்டு மணி வரை நடந்தது.இதில், 61 பேர் மாவட்டத்திற்குள்ளேயும், நான்கு பேர் மாவட்டத்திற்கு வெளியேயும், இடமாறுதல் பெற்றனர். மீதமுள்ள 15 பேர் இடமாறுதல் வேண்டாம் என தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர். இடமாறுதலுக்கான உத்தரவை, ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் செந்தாமரை வழங்கினார்.குளறுபடி குறித்து செந்தாமரை கூறுகையில், ""கவுன்சலிங் துவங்க அனைத்து மாவட்டங்களிலும் தான் தாமதம் ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு தான், ஆன்லைன், இணைப்பு கிடைத்தது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தச் ஆசிரியர்களின் மூப்பு பட்டியல், திருச்சி மாவட்ட பட்டியலோடு தவறுதலாக கலந்துவிட்டது. அதனால் தான் குளறுபடி ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டுவிட்டது,'' என்றார்.


No comments:

Post a Comment