ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெறாத 6 1/2 லட்சம் பேருக்கு அடுத்தவாரம் முதல் ஹால் டிக்கெட் வினியோகம்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஹால் டிக்கெட் அனுப்பப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தகுதி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கல்வி உரிமம் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வை ஜுலை மாதம் 12-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் பணியில் நியமிக்க தகுதி படைத்தவராக கருதப்படுவர். அதனால் இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 6லட்சத்து 77 ஆயிரம் பேர் எழுதினார்கள். தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வு முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேர்வு எழுதியவர்களில் 2448 பேர் மட்டுமே வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைவரும் மிக குறைந்த மதிப்பெண்னை எடுத்து இருந்தனர். தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் ஆனால் தோல்வி அடைந்த பெரும்பாலானவர்கள் 20,30,40,50 மதிப்பெண்களை பெற்றனர். தேர்ச்சி விகிதம் ஒரு சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தது. மேலும் 25 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 2448 பேர் மட்டும் தேர்ச்சி பெற்று இருந்ததால் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு 3 மணிநேரம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் மறுதேர்வை எழுதலாம்.
விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வை எழுத இயலாது. மறுதேர்விற்கான ஏற்பாடு களை தேர்வு வாரியம் விரிவாக செய்து வருகிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் அடுத்தவாரத்தில் இருந்து வினி யோகம் செய்யப்படுகிறது. அவரவர் வீட்டிற்கு ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment