எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் 
ஆன் லைனில்விண்ணப்பிக்கும் வசதி: 
அரசு தேர்வுத்துறை அறிமுகம்.


செப். 11- எஸ்.எஸ்.எல்.சி, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதை அறிந்து ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை அரசுத் தேர்வுத்துறை அறிமுகம் செய்துள்ளது.
 
அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான அறிவுரைகளை www.dge.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
 
தேர்வு கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். கடைசி நாள் 18-ந்தேதியாகும். தனித்தேர்வர்கள் ஆன்- லைனில் 12-ந்தேதி முதல் 17-ந்தேதி மாலை 5.45 மணி வரை அனைத்து நாட்களிலும் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
 
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினையும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான செலானையும் 17-ந்தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
 
ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்காமல் நேரடியாக (எஸ்.எஸ்.எல்.சி) பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தாலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் தனித்தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி அவர் இறுதியாக படித்த பள்ளியிலோ அல்லது இருப்பிட முகவரிக்கு அருகாமையில் உள்ள மேல்நிலைப் பள்ளியிலோ தலைமை ஆசிரியரின் கையெழுத்து பெற்று வருவாய் மாவட்ட அரசு தேர்வுகள் மண்டல அலுவலக முகவரிக்கு மேற்படி பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், தேர்வு கட்டணம் செலுத்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சலானையும் மற்றும் உரிய இணைப்புகளையும் ரிஜிஸ்டர் தபால் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ 24-ந் தேதிக்குள் சேருமாறு சமர்ப்பிக்க வேண்டும்.
 
எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.  இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment