நாமக்கல் மாவட்டத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் பணிநியமன உத்தரவுகள்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு செய்ததாக, டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொடக்கக் கல்வி தலைமை ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையில் ரூ. 81 லட்சம் முறைகேடு நிகழ்ந்ததாக கூறி, தமிழக அரசு 77 தலைமை ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட 77 பேரில், 67 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மீ்ண்டும் பணிஉத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 77 பேரில், 7 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. மற்ற மூவரில் இருவர் நர்சரி பள்ளி தலைமையாசியர்கள் மற்ற ஒருவர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர். இவர்கள் மூவருக்கும் விரைவில் பணிஉத்தரவு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment