பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலானது.


புதுடில்லி:பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.50 ரூபாயும், டீசல் விலை, 45 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளவும், குறைத்துக் கொள்ளவும், மத்திய அரசு அனுமதிவழங்கியது.அதன்படி, கடந்த பல மாதங்களாக, பெட்ரோல் விலைஅவ்வப்போது உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.

மாதம்தோறும்:கடைசியாக, கடந்த மாதம், 18ம் தேதி பெட்ரோல் விலை, மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, லிட்டருக்கு, 30 காசுகள் குறைக்கப்பட்டது. ஆனால், நேற்றைய விலை மாற்றத்தில், லிட்டருக்கு, 1.50 ரூபாய் உயர்த்தப்பட்டது.அதேநேரத்தில், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டையும் கைவிட, கடந்த மாதம் முடிவு செய்த மத்திய அரசு, "பொதுமக்களை பாதிக்கும் வகையில், டீசல் விலையை, ஒரேயடியாக உயர்த்தாமல், மாதம் தோறும் குறைவான அளவிலேயே, உயர்த்த வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால், டீசல் விலை கடந்த மாதம், 45 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று, லிட்டருக்கு, 45 காசுகள் உயர்த்தப்பட்டது.

இழப்பு:உள்ளூர் விற்பனை வரி அல்லது, "வாட்' வரி சேர்த்து விற்கப்படும் போது, டில்லியில் நேற்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1.80 ரூபாய் உயர்ந்தது; டீசல் விலை, 51 காசுகள் உயர்ந்தது.இதனால், பெட்ரோல் லிட்டர், 69.05 ரூபாய் என்ற விலையிலும், டீசல், 48.16 ரூபாய் என்றவிலையிலும் விற்கப்படும்.டீசல் விலையை படிப்படியாக உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வரும் காலங்களில், தங்களின் இழப்பை சரிக்கட்டி விடும் என, நம்பப்படுகிறது. 

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:டீசல் விலை கடந்த மாதம்,லிட்டருக்கு, 45 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால், டீசல் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய்நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு, லிட்டருக்கு, 9.15 ரூபாயாக குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சர்வதேச சந்தையில், டீசல் விலையில் திடீரென உயர்வு ஏற்பட்டதால், அரசுக்கு டீசல்விற்பனையில் ஏற்படும் இழப்பு, லிட்டருக்கு, 10.72 ரூபாயாகஉயர்ந்தது.

45 காசுகள்:தற்போது, டீசல் விலை, 45 காசுகள் உயர்த்தப்பட்டால், இந்த இழப்பு, லிட்டருக்கு, 10.27 என்ற அளவில் குறையும்.டீசல் தவிர, சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையில், சிலிண்டர் ஒன்றுக்கு, 481 ரூபாயும், மண்ணெண்ணெய் விற்பனையில்,லிட்டர் ஒன்றுக்கு, 31.60 ரூபாயும், எண்ணெய் நிறுவனங்களுக்குதற்போது நஷ்டம் ஏற்படுகிறது.இவ்வாறு இந்தியன் ஆயில் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment