மத்திய, மாநில அரசின் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு.

திருச்சி: "திருச்சி மாவட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்கள், மத்திய, மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது' என, கலெக்டர் ஜெயஸ்ரீ அறிவித்தார்.இதுகுறித்து, கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்ட அறிக்கை:
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ பழங்குடியின மாணவர்கள், கல்வி பயில மத்திய, மாநில அரசுகள் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றன.வரம்புகள்: மத்திய அரசு போஸ்ட் மெட்ரிக் (எஸ்.சி., எஸ்.டி.,) கல்வி உதவித்தொகை, 25 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.இதை பெற, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஆண்டு வருமானம், 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு, ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

மாநில அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் உயர்கல்வி சிறப்புத் தொகை பெற, ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வங்கிக் கணக்கு அவசியம்: மேலும், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை ஆகியவற்றை பெற, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிலும் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களுக்கு, இலவச பயிற்சி கட்டணம் வழங்கப்படும்.பட்டதாரிகள் சொந்த தொழில் துவங்க, மானியமாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும். கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள், வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களின் விண்ணப்பங்கள், இம்மாதம் 31 ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள்ளும், சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.கல்வி உதவித் தொகை குறித்த, சந்தேகங்களுக்கு, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகவும்.இவ்வாறு கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment