வால்பாறை அருகே ஒரே ஒரு மாணவருக்காக இயங்கும் பள்ளி.


கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த கள்ளர்குடி என்ற பகுதியில் இயங்கும் கள்ளர்குடி பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார்.

அந்த ஒரே ஒரு மாணவருக்கு கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியரும், ஒரு தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் அமைந்துள்ள அந்த பள்ளியில், முன்பு 4 மாணவர்கள் படித்து வந்ததாகவும், அவர்களது பெற்றோர் வேலைக்காக திருப்பூர் மற்றும் கோயம்பத்தூர் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டதால், மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றாகக் குறைந்துவிட்டதாகவும் தலைமை ஆசிரியர் முருகானந்தம் கூறுகிறார்.
2ம் வகுப்பு பயிலும் அந்த ஒரு மாணவருக்கு பாடம் சொல்லித் தருவதற்காக தினமும் 3 கி.மீ. தூரம் வனப்பகுதியில் யானைக்கும், அட்டை, பாம்புகள் போன்றவற்றுக்கும் பயந்து உயிரை பணயம் வைத்து ஆசிரியர் கலைச்செல்வியும், தலைமை ஆசிரியர் முருகானந்தமும் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தான் வலியுறுத்தி வருவதாகவும், ஆகஸ்ட் வரை பொறுமையோடு காத்திருக்கப் போவதாகவும் தலைமை ஆசிரியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment