CPS திட்டத்தில் செலுத்தப்படும் சந்தா தொகையை பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதை எதிர்த்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு வார காலத்திற்கு தடையாணை பெற்ற விவரத்தை குறிக்கும் தடையாணை நகலை உங்களுக்காக வெளியிடுகிறோம்.
தற்போது தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் இத்திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் சந்தா தொகையினை சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பாக ஆசிரியர்களிடம் கையொப்பம் கேட்கப்பட்டதாகவும், அதற்க்கு ஆசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்றும் அறிய வருகிறோம்.
இதனை தொடர்ந்து இத்தகவலை உங்களுக்காக வெளியிடுகிறோம். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A.) இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடமும், அதனை தொடர்ந்து தமிழக அரசிடமும் பாதிப்புகளை தெளிவாக தங்களின் மனுக்களில் விளக்கியுள்ளது. நல்லதொரு தீர்வினை மிக விரைவில் காண்போம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.
தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்ட பாதிப்புகளையும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் தமிழக அரசிடம் கொண்டு செல்லும் உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்புடன். படியுங்கள். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகளை அறியுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். ஒன்றுபடுங்கள் எங்களுடன். உழைப்போம் இடைநிலை ஆசிரியர் நலன் காத்திட. அத்துடன் செயல்படுவோம் அனைத்து நிலை ஆசிரியர்களின் நலன் காக்கப்பட.
No comments:
Post a Comment