மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் : நவம்பர் 18ல் தகுதி தேர்வு
(CTET)
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு வரும் நவம்பர் 18ம் தேதி சிபிஎஸ்சி நடத்துகிறது. கேந்திரிய வித்யாலயா, நவோதய வித்யாலயா உட்பட மத்திய அரசின் கீழ் உள்ள பள்ளிகளிலும், மத்திய அரசின் அதிகாரம் உள்ள அந்தமான், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆசிரியர் நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு (சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) நடத்தப்படுகிறது. சென்னை, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நவம்பர் 18ம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது.
ஆன்லைன் வழி விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். மாநில அரசுகளின் கீழ் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகளும் இந்த தகுதி தேர்வில் வெற்றிபெறுபவர்களை தேவையெனில் பயன்படுத்தலாம். ஒரு தேர்வுக்கு கட்டணம் ரூ.500. இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ரூ.800. பட்டியல் வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 250/400 ரூபாய். இணைதளங்கள் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment