போலி நோட்டுகள் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி
 தனி இணையதளம் தொடக்கம்

 கள்ள நோட்டுகளைக் கண்டறியும் வழிமுறைகள் குறித்து விளக்கும் 


இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.




 www.paisaboltahai.rbi.org.in என்ற இணையதள முகவரியில் 10, 20, 50, 100,


 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் உண்மையான காட்சி வடிவம் 


குறித்து தெரிந்துகொள்ளலாம்.
இத்தகைய நோட்டுகளின் 


போஸ்டர்களை  இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு 


கள்ள நோட்டுகளைக் கண்டறியலாம். மேலும் இதுகுறித்து 


ஆவணப்படம் ஒன்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


அதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டு எண்களின் 


விவரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment