அரசு வழங்கும் இலவச நோட்டில் மின் சிக்கன 
விழிப்புணர்வு வாசகம்

மின் சிக்கன அவசியத்தை மாணவர்கள் உணரும் வகையில், தமிழக அரசு வழங்கும் இலவச நோட்டுகளின் பின்அட்டையில் வழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரசு சார்பில், இலவச நோட்டு வழங்கப்படுகிறது. அதில், எதிர்காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன், மின் சிக்கன விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.இலவச நோட்டுகளின் பின் அட்டையின் உள்பகுதியில், "மின் சிக்கனம் தேவை இக்கணம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.



 மின்சாரத்தின் முக்கியத்துவம், மின்சாரம் தயாரிப்பதில் ஏற்படும் சிக்கல்கள், பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணம், தேவையில்லாமல் இயங்கும் மின்விசிறி, விளக்குகள், "டிவி' போன்றவற்றை அணைக்க வேண்டும், குண்டு பல்புகளுக்கு பதில் சி.எப்.எல்., - எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்த வேண்டுமென கூறப்பட்டிருக்கிறது. மேலும், சூரிய ஒளியில் இயங்கும் சூடேற்றும் கருவிகளை பயன்படுத்த வேண்டும், மின்சாரமே நாட்டின் ஆதாரம் என்ற வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மின் சிக்கன அறிவுரை எளிதில் அனைத்து தரப்பினரையும் சென்றடையும். அதனாலேயே, மாணவர்களுக்கு வழங்கும் இலவச நோட்டுகளில் மின் சிக்கனம் குறித்த வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதை பார்க்கும் போதெல்லாம், மாணவர்களிடையே மின் சிக்கனம் குறித்த உணர்வு ஏற்படும்,' என்றனர்.

No comments:

Post a Comment