கோட்டையில் கொடியேற்றி முதல்வர் சுதந்திர தின உரை
சென்னை ஜார்ஜ் கோட்டையில் 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன்.
தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதுடன் கூடுதலாக 11 சதவீதம் வளர்ச்சியை பெறுவதே எனது லட்சியம்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் வளர்ச்சி 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அதற்காகவே 2023 தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி 106 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. மும்முனை மின்சாரத்தால் 1,37,000 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடி வழக்கமான பரப்பளவில் நடைபெற வாய்ப்பு உள்ளது.
அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசு செயல்பட்டு வருகிறது
சுதந்திரத்துக்காக அடுத்தவரின் சுதந்திரத்தைப் பறிப்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்.
இந்தியாவை வல்லரசாகவும் அதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் உருவாக்க அரசு செயல்பட்டு வருகிறது.
- இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.
முன்னதாக அவருக்கு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர், பின்னர் காவல்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொது சேவை புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.
No comments:
Post a Comment