ரம்ஜான் விடுமுறையில் பள்ளி செயல்பட்டது.
ஆட்டோ கவிழ்ந்து 6 மாணவ-மாணவிகள் காயம்

கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் தனியார் சி.பி. எஸ்.இ. பள்ளி உள்ளது. சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர பெற்றோர்கள் தனியாக ஆட்டோ ஏற்பாடு செய்து இருந்தனர். 


இந்த நிலையில் ரம்ஜான் அரசு விடுமுறை நாளில் பள்ளி வகுப்புகள் செயல்படுவதாக நிர்வாகத்தினர் அறிவித்து இருந்தனர். இதையடுத்து இன்று காலை கேளம்பாக்கத்தை சேர்ந்த 6 மாணவ - மாணவிகள் ஒரு ஆட்டோவில் பள்ளிக்கு சென்றனர். 

பள்ளி அருகே வந்தபோது முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதால் அதன் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இதில் கேளம்பாக்கத்தை சேர்ந்த முரளிதரன் மகள் சுஜிதா (வயது 12), மகன் அனில்குமார் (9) உள்பட 6 மாணவ - மாணவிகள் படுகாயம் அடைந்தனர். 

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுஜிதாவின் வலது கால் உடைந்துள்ளது. மற்றவர்களுக்கு லோசான காயம் ஏற்பட்டது. 

இதுபற்றி கேளம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment