வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை
வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஜூன் 30ம் தேதியில் இருந்து ஐந்து ஆண்டு முடிவடைந்து, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெறாத, எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவருக்கும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆக., 31ம் தேதி மதியம் வரை விண்ணப்பப்படிவம், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் பதிவுச் செய்து, ஜூன் 30ம் தேதியில் ஓராண்டு முடிவடைந்த எஸ்.எஸ்.எல்.ஸி., அதற்கு கீழ், ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாளில் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்விச்சான்றுகள் மற்றும் ரேஷன் கார்டை, வேலைவாய்ப்பு அலுவலரிடம் காட்டி, விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே விண்ணப்ப உதவித் தொகை தொடர்ந்து பெற்றுக் கொண்டு வரும் பயனாளிகள், 2011- 12ம் ஆண்டுக்கான சுய உறுதி மொழி ஆணவப்படிவத்தினை அளிக்காதவர்கள், தற்போது பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment