பாரதியார் பல்கலை.யின் தொலைதூரக் கல்வித் தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கி மோசடி?

AUG 15: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பருவத் தேர்வில் பி.பி.எம். பாடத்தில் 96 பேருக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கி மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வழங்கப்படும் பி.பி.எம். பட்டப் படிப்பில், கேரள மாநில மாணவர் சேர்க்கை மையத்தில் பதிவு செய்த 96 பேர் செமஸ்டர் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், அவர்கள் இதில் தேர்ச்சி பெறவில்லை


இதனிடையே இத் தேர்வில் 96 பேருக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதை, கணினி பகுப்பாய்வளர் மகேஷ் என்பவர் கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து 79 மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒருவரின் விவரங்களைச் சோதனை செய்து பார்த்தார். அப்போது, குறிப்பிட்ட அந்த நபர் வெறும் 19 மதிப்பெண்களே பெற்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


வழக்கமாக பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் மதிப்பெண் விவரங்களை, கணினியில் பதிவு செய்யும்போது, உண்மையான மதிப்பெண் பட்டியலே வழங்கப்படும். ஆனால், பி.பி.எம். படிப்பில் 96 பேருக்கான மதிப்பெண் குறித்த விவரங்கள் தனியே ஒரு தாளில் வழங்கப்பட்டு பதிவு செய்து மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.


இந்நிலையில், இந்த மோசடி குறித்து பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் துணைக் குழு விசாரிக்கும் என்று துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment