Print E-mail
வெள்ளிக்கிழமை, 30, ஆகஸ்ட் 2013 (17:33 IST)

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் -
புதுக்கோட்டையில் 356 பேர் கைது
 


புதுக்கோட்டை ஆக.30: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர்.


இதனொரு பகுதியாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 139 பெண்கள் உட்பட 356 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சி.பாலச்சந்தர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ச.அலெச்சாண்டர், செயலாளர் க.கருப்பையா மற்றும் நிர்வாகிகள் கோ.திருப்பதி, எம்.செபஸ்டியான், என்.ராஜேந்திரன், ந.ரவிச்சந்திரன், எம்.வெங்கடசுப்பிரமணியன், வெ.ராமன், க.முத்துச் சாமி, எம்.மகேஸ்வரி, வே.கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன், பொருளாளர் எம்.ஜோஷி, சுகாதாரப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் கே.நாகராஜன் ஆகியோர் பேசினார். சங்கத்தின் வட்டார நிர்வாகிகள் பேச்சியம்மாள், சங்கர், லதா, ஆரோக்கியசாமி, கண்ணையா, தேவேந்திரன், சேகர், தேவராஜ், மாப்பிள்ளைத்துரை, வின்சென்ட், ஜீவன்ராஜ், நடனம், ஆரோக் கியஅருள் ஜேசுராஜ் மற்றும் 139 பெண்கள் உட்பட 356 பேர் கைதானார்கள்.

No comments:

Post a Comment