கல்விபணி அல்லாத பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவதை அரசு தடை செய்ய வேண்டும்.
Right to Education Act இல் ஆசிரியர்களை தேர்தல் பணி, பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு (Decennial Census) மற்றும் பேரிடர் சூழ்நிலைகள் தவிர பிற கல்விப்பணி அல்லாத பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
இதில் கல்விபணி அல்லாத பணிகளில் தேர்தல் பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணி என்ற பெயரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்ற பணி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கல்விபணி அல்லாத பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டின் நோக்கமே ஆசிரியர்களை கல்விபனியில் மட்டுமே ஈடுபடுத்தவேண்டும் என்பதே நோக்கமாகும். ஆசிரியர்களை பிற பணிகளுக்கு பயன்படுத்துவதில் தேர்தல் பணிக்கு விளக்களிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி ஆசிரியர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிக்கு பயன்படுத்துவது கல்விபணியை பெரிதும் பாதிக்கிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் பனி என்பது ஆண்டு முழுவதும் செய்யக்கூடிய பணியாகும். இப்பணி ஊராட்சி பகுதிகளில் ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. நகர மற்றும் மாநகர பகுதிகளில் இப்பணி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு கல்விபணியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. நகர பகுதிகளில் மட்டும் இப்பணி வழங்கப்படுவதால் பிறபகுதிகளின் ஆசிரியர்களுக்கு இந்த பாதிப்பு தெரிவதில்லை.
தற்போது திருச்செங்கோடு பகுதியில் இந்த பாதிப்பை எதிர்த்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்த்து குரல் கொடுத்துள்ளது. அப்பகுதியில் 23.8.13 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானித்துள்ளது. பாராட்டுகிறோம். இதுகுறித்த நிலையில் சங்கங்களும் பொதுநலன் நோக்கர்களும் டில்லியில் உள்ள தொடக்க கல்வித்துறைக்கு புகார் மனு அனுப்ப முன்வரவேண்டும். அங்குள்ள GOVT OF INDIA - ELEMENTARY EDUCATION துறைதான் Right to Education சார்ந்த விதிமுறைகளை வகுக்கிறது. எனவே இதில் கவனம் செலுத்தி ஆசிரியர் சமுதாயத்தையும் மாணவர்களின் கல்வி நலனையும் பாதுகாக்கவேண்டும்.
ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி செய்தி தொகுப்பு கீழே உங்கள் பார்வைக்கு.
No comments:
Post a Comment