G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற  அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு.(இதில் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். சரிசெய்து வெளியிடுவோம் )

   தலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION  பற்றி ஒரு சிறு விளக்கம்.

OPTION பற்றிய விளக்கம். 

    1.1.2006 முதல் 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு / சிறப்பு நிலை எய்தியவர்கள் ஆறாவது ஊதிய குழு ஊதியத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது,    முந்தைய ஊதிய விகிதத்தில் தேர்வு/சிறப்பு நிலை பெற்ற காலம் வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு/சிறப்பு நிலைக்கு பின்னர் புதிய ஊதிய  விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம்.  அதாவது 9300 - 34800 + G.P. 4300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளலாம். 

RE-OPTION பற்றிய விளக்கம்.

      மேற்கண்டவாறு அனுமதிக்கப்பட்ட வாய்ப்பை  பயன்படுத்தத் தவறியவர்கள் தற்போது பயன்படுத்திகொள்ளலாம். இதுவே RE-OPTION.

RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான அடிப்படை ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர்  விளக்கம்.

        இந்த அரசாணையில் RE-OPTION பற்றி குறிப்பிடுகையில்  "re-option should not be in any case lead to fixation of a lower pay than what has already been fixed". என்ற வரிகளும்  உள்ளது. அதாவது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்தை விட குறைவான தொகை RE-OPTION செய்யும் போது  நிர்ணயிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதாகும்.

       ஆனால் தற்போது  RE-OPTION கொடுத்தால், பெற்று வருவதை விட குறைவான ஊதியம் பெறும்  நிலை தான் உள்ளது. பெரும்பாலும் 1.1.2009 முதல் 31.5.2009 -க்கு இடைப்பட்ட காலத்தில் பழைய ஊதிய விகிதத்தில்  தேர்வு நிலை பெற்றிருந்தவர்கள்  தான் OPTION கொடுக்க தவறியிருப்பார்கள். 

   உதாரணத்திற்கு 5.1.2009 இல் பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை பெற்றவர்கள் தற்போது RE-OPTION கொடுத்தால் தற்போது அவர்கள் பெற்றுவரும் அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயிக்க இயலும் என்பதை உங்களுக்காக விளக்குகிறேன். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.

5.1.2009 இல் பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை பெற்றவர்கள் OPTION கொடுக்காமல் 1.1.2006 இல் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து வரும் நிலையில் தற்போது அவர்களது ஊதியம்.               (தற்போதைய 3% + 3% Grant of one additional increment -ம்   சேர்த்து கணக்கிட்டு காட்டப்பட்டுள்ளது.)

5.1.1999 இல் நியமனம் பெற்றவர் ஊதியம் 31.12.2005 இல் 5250. இவர்கள் 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்து பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஜனவரி ஆண்டு  ஊதிய உயர்வினை பெற்றிருப்பர்.

1.1.2006 இல் ஊதியம்         5250 x 1.86 =  9765 + G.P.2800 =  12565

1.1.2006 இல் Increment           12565 + 380             =   12945

1.1.2007 இல் Increment           12945 + 390             =   13335

1.1.2008 இல் Increment           13335 + 400              =   13735

1.1.2009 இல் Increment           13735 + 420              =   14155

5.1.2009 ல் Sel.Gr.(3%+3%)    14155 + 430 + 430    =  15015

1.1.2010 இல் Increment           15015 +450               =  15465

1.1.2011 இல் P.P + Increment  (15465 +750) + 490  =  16705

1.1.2012 இல் Increment             16705 + 510            =   17215

1.1.2013 இல் Increment             17215 + 520            =   17735
======================================================================

தற்போது RE-OPTION கொடுத்தால் பெறக்கூடிய ஊதியம்.

1.1.2009 இல் பெற்ற பழைய ஊதிய விகித  ஊதியம்         =   5750.

5.1.2009 இல் தேர்வு நிலை ஊதியம்           =      5750 + 125   =   5875

5.1.2009 இல் RE-OPTION கொடுப்பதால் 
பெறக்கூடிய ஊதிய நிர்ணயம்                   =      5875 x 1.86  =  10928      

GRADE PAY  சேர்த்து ஊதியம்                       =  10928 + 4300  =  15228

1.1.2010 இல் Annual Increment                              =  15228 + 460    =  15688

1.1.2011 இல் Annual Increment                              =  15688 + 470    =  16158     

1.1.2012 இல் Annual Increment                              =  16158 + 490     = 16648

1.1.2013 இல் Annual Increment                              =  16648 + 500     =  17148

========================================================================


      
RE-OPTION வாய்ப்பை 5.1.2009 இல் தவற
விட்டவர் தற்போது பெறும்  ஊதியம்          = 17735 
  
தற்போது RE-OPTION வாய்ப்பை பயன் 
படுத்தினால் பெறக்கூடிய ஊதியம்              = 17148
                                                      ----------------
  குறைவான ஊதியம்                                  587
                                                      ----------------

    
என்ன சொல்வதென்று புரியவில்லை.

  
                                                                             

No comments:

Post a Comment