உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளினை உங்களுக்காக வெளியிடுகிறோம்.
நன்றி : www.aeeoassociation.blogspot.com
இனிய வணக்கம்
AEEO நண்பர்களே...!! கல்வி சார் வலைபூ நண்பர்களே...!! கல்வி சார் முகநூல் நண்பர்களே..!! மீண்டும் வணக்கங்கள்
ஒரு வேண்டுகோள்
1.பள்ளிகளை பார்வை செய்யும்போது எந்த மாதிரியாக பார்வையிட வேண்டும் என்ன பதிவேடுகளை பார்க்கலாம் கற்றல் கற்பித்தல் சார்பாக வகுப்பறை பார்வை பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்
2.பள்ளி ஆண்டாய்வு செய்யும்போது எந்த மாதரியாக ஆண்டாய்வு செய்ய வேண்டும் என்ன என்ன பதிவேடுகள் பார்வையிட வேண்டும் ஆண்டாய்வுபடிவம் மாதிரி , AEEO பூர்த்தி செய்து DEEO விடம் சமர்ப்பிக்க எதுவாக படிவம், முதலிய வற்றையும் உங்கள் கருத்துக்களையும் முன்னால்இயக்குனர்கள் வழிகாட்டுதல் அரசு ஆணைகள் முதலியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்
முக்கிய அறிவிப்பு
நண்பர்களே AEEO சங்கத்தில் அரசு ஆணைகளுக்கு சந்தேகம் தீர்க்க ஒரு குழு அமைத்துள்ளோம் 1. AEEO , 2. ஓய்வு பெற்ற CEO , 3. ஓய்வு பெற்ற DEEO 4.ஓய்வு பெற்ற DEEO (PA) 5. கண்காணிப்பாளர் 6. AEEO (ஓய்வு) ,7.HM 8.ஆசிரியர் ஆகியோர்கள் கொண்ட குழு உருவாக்கி உள்ளோம் . உங்கள் சந்தேகங்களை எங்கள் E.mail முகவரிக்கு அனுப்புங்கள் உடன் பதில்களை எங்கள் blogspotல்(www.aeeoassociation.blogspot.in) உங்கள் கேள்வி – பதில் என்ற வகையில் பதில் கூற உள்ளோம் ஆகவே அனைவரும் பாடம் சார்பாகவும் அரசு ஆணைகள் சார்பாகவும் ஊதிய முரண்பாடுகள் சார்பாகவும் சந்தேகங்களை உடன் கேட்டு பயன் பெறுங்கள்.
இவண்,
சுந்தர்ராஜன்
(கௌரவத் தலைவர்)
அய்யாசாமி
(தலைவர் )
சௌந்தரராஜன
(பொதுச்செயலாளர்)
ஆரோக்கியம்
(பொருளாளர்)
AEEO சங்கம்
அந்தக் குழுவின் உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரியை வெளியிடுங்கள். எந்த தகுதியின் அடிப்படையில் அந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாமா? ஏனென்றால் ஒரு சிலர் அப்போதும் இப்போதும் கடமையை சரிவர செய்ததில்லை. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாய் இருத்தல் நலம். குழுவின் உறுப்பினர்கள் அவர்கள் வகித்த பதவிகள் தற்போது வகிக்கும் பதவிகள் முதலியவற்றை வெளிப்படையாய் வெளியிடுங்கள்.
ReplyDeleteநண்பர்களுக்கு வணக்கம். தங்களின் கேள்விக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் இந்த பதிவை நமது அரங்கத்தில் பதிவிட்டதால் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள். எனவே பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த பதிவு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் www.aeeoassociation.blogspot.com என்ற வலைதளத்தில் அவர்களால் வெளியிடப்பட்டது. அவர்களது தகவலை பகிர்ந்துகொள்ளவே நமது வலைதளத்தில் நன்றிகூறி வெளியிடப்பட்டது.
ReplyDeleteAEEO சங்கத்தில் அரசு ஆணைகளுக்கு சந்தேகம் தீர்க்க ஒரு குழுவை உருவாகியுள்ளதாக தகவல் கூறியுள்ளார்கள். அது அவர்கள் சங்கம் சார்ந்த விஷயம். ஏதேனும் அரசாணைகளில் சந்தேகங்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அது உங்கள் விருப்பத்தை சார்ந்தது. அதை விட்டு விட்டு அவர்கள் பெயர் என்ன, தகுதி என்ன, சிலர் அப்போதும் இப்போதும் கடமையை சரிவர செய்ததில்லை என்று சொல்வது சரியல்ல என்றே நான் எண்ணுகிறேன்.
அவர்கள் சங்கம் அவர்களின் உறுப்பினர்களுக்கு கடமைப்பட்டது. அவர்கள் கூறியுள்ளபடி நமக்கு சந்தேகங்களை தீர்த்து வைத்தால் அது அவர்கள் நமக்கு செய்யும் சேவை. கடமை அல்ல. நமக்கு நாம் அங்கம் வகிக்கும் சங்கம் கடமைப்பட்டது. நமக்கு விருப்பமிருந்தால் நாம் சந்தேகம் கேட்கலாம். விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடலாம். அதைவிட்டுவிட்டு அவர்கள் கடமையை சரிவர செய்ததில்லை என்று கூறுவது வருத்தத்தையே அளிக்கிறது.
சார் வணக்கம் .உங்க செய்திகள் அனைத்தும் அருமை
ReplyDeleteஉங்கள் கல்வி பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்