ஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு .... மூத்த ஆசிரியர்களுக்கும்தான் என்று வெளியிடப்பட்ட கட்டுரையில் ஒரு சிறு திருத்தம் மற்றும் அதில் குறிப்பிட்டிருந்த கடிதத்திற்கு வெளியிடப்பட்ட Clarification letter ஐ உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம்.

    மூத்த ஆசிரியர்களுக்கும் பாதிப்புதான். ஒத்த ஊதிய விகிதங்களில் பணியாற்றிய காலங்கள்   தேர்வு/சிறப்பு நிலைகள் கணக்கிட  1.1.2006 லிருந்து இயலாது  என்பதற்கு பதிலாக 1.6.2009 லிருந்து இயலாது  என்பதை பின்னர் 14.5.2012 இல் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தை வெளியிட்டு திருத்த விளக்கமளிக்க விரும்புகிறோம்.

 இதனை குறிப்பிட்டு இந்த கடித நகலை உங்களுக்காக நமக்கு அனுப்பி திருத்தம் செய்து வெளியிட உதவிய நண்பர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சிதம்பரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


   ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதங்கள் 1.1.2006 லிருந்து கணக்கிட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும் 1.6.2009 இல்  தான் அரசாணை  வெளியிடப்பட்டதால் 1.1.2006 முதல் 31.5.2009 வரையிலான காலத்தில் பலர், முந்தைய அரசாணைகளை பின்பற்றி ஒத்த ஊதிய விகிதங்களில்   பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு தேர்வு/சிறப்பு நிலை பெற்றிருப்பர். அவர்களுக்கு  பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கடித எண்.23373/S/2011-2, DATED  09.08.2011 இன் படி நடைமுறைபடுத்தினால் 1.1.2006 முதல் 31.5.2009 வரையிலான காலத்தில் முந்தைய விதிகளை பின்பற்றி அளிக்கப்பட்ட  தேர்வு/சிறப்பு நிலைகளை ரத்து செய்து பணம் திருப்பி செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். எனவே இதனை ஒரு துறையின் இயக்குனர் அவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், கடித எண்.23373 - க்கு திருத்தம் செய்து கடித எண் .7296 நாள் 14.5.2012 வெளியிடப்பட்டுள்ளது. 

      திருத்திய ஊதிய விகித   விதிகள்     2009 இல் தேர்வு/சிறப்பு நிலைக்கு என தனி ஊதிய விகிதம் அனுமதிக்கப்படாததால் 1.1.2009 -க்கு பிறகு உயர்பதவியில் தேர்வு/சிறப்பு நிலை கணக்கிட ஒத்த ஊதிய விகித பணிக்காலத்தை எடுத்துக்கொள்ள இயலாது என்பதை உங்களுக்கு விளக்கிட கடமைப்பட்டுள்ளோம்.
  



No comments:

Post a Comment