14-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு
முகாம் தேதி மாற்றம். 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழகத்தில் 2013ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ம்தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து பட்டியலில் பெயர் சேர்த்தல், நிக்கல் உள்ளிட்ட திருத்தங்களை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதற்காக 7-10-2012, 14-10-2012 மற்றும் 21-10-2012 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 7-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிலையில் அடுத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ள 14-ம் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது. எனவே அன்றைய சிறப்பு முகாம், 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment