அண்ணாமலை பல்கலைக்கழக பட்டப் படிப்பு: அரசு புதிய உத்தரவு.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு குறித்து தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு முதுகலை ஆங்கிலம் மற்றும் தொடர்பியல் படிப்பானது, மற்ற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முதுகலை ஆங்கிலப் படிப்புக்கு இணையானதாகும்.
இந்தப் படிப்பை இணையானது என்று அறிவிக்கக் கோரும் கோரிக்கை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு வந்தது. அந்தத் துறையானது, தகுந்த உத்தரவினைப் பிறப்பிக்க உயர் கல்வித் துறையிடம் தெரிவித்தது. அதன்படி, இப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

No comments:

Post a Comment