சிம்கார்டு விற்பனை: அரசு புது உத்தரவு
தமிழகத்தில், பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் கம்பெனிகளின் சிம் கார்டுகளை வாங்கும் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க, ரேஷன் கார்டு நகல் இல்லாமல் சிம் கார்டுகளை தர வேண்டாம் என, விற்பனையாளர்களுக்கு அரசு அறிவுறுத்தி இருந்தது. ரேஷன் கார்டுகளை அடையாள அட்டையாக காட்டும் சிலர், புதுப்பிக்காத பழைய ரேஷன் கார்டுகளை காண்பித்து, சிம் கார்டுகளை வாங்குகின்றனர். இதையடுத்து, ரேஷன் கார்டு நகலுடன், இந்தாண்டு பொருட்கள் வாங்குவதற்கான உள்தாள் நகலும் வாங்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர், ரேஷன் கார்டில் பொருட்கள் தொடர்ந்து வாங்கியதற்கான பதிவும் இருந்தால் மட்டுமே, சிம்கார்டுகளை வினியோகிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment