பள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களை
உதவி ஆசிரியர்கள் என குறிப்பிடாமல் பட்டதாரி
ஆசிரியர்கள் (பாடம்) என குறிப்பிட உத்தரவு.
தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனரிடம்
பட்டதாரி ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என குறிப்பிடுவதை
தவிர்த்து பட்டதாரி ஆசிரியர் என பாடத்துடன் குறிப்பிட உத்தரவிட கோரி
மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று ந.க. எண். 28042/சி5/இ2/2012.
நாள். 19.04.2012.- இன் மூலம் இனி பட்டதாரி ஆசிரியர்களை, உதவி
ஆசிரியர்கள் என குறிப்பிடாமல் ( ) பாடம் குறிப்பிட்டு பட்டதாரி ஆசிரியர்
என குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக தமிழாசிரியர் கழகத்தை மனதார வாழ்த்துகிறோம். பட்டதாரி
ஆசிரியர்களின் கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறார்கள். பாராட்டுகிறோம்.
இடைநிலை ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என குறிப்பிடுவதை
தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என அழைப்பதில்
ஒரு அற்ப சந்தோசம் பலருக்கு. எனவே இவர்களை வைத்து சங்கம்
நடத்தியவர்களுக்கு இதை சிந்திக்கவே நேரம் இல்லை.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் இடைநிலை ஆசிரியர்களை உதவி ஆசிரியர் என அழைப்பதை தவிர்த்து இடைநிலை ஆசிரியர்கள் என மட்டும் குறிப்பிட உத்தரவிடக் கோரி தொடக்க கல்வி துறையிடம் மனு அளிக்கும்.