பள்ளிகல்வித்துறையில்  பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு  ஜூலை 13-இல்  தொடங்குகிறது.

பணி நிரவல் 
ஜூலை 13,14   மாவட்டதிற்க்குள் பணி நிரவல்
ஜூலை 16,17   மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல்

இடமாறுதல் 
ஜூலை 23       மாவட்டதிற்க்குள் இடம் மாறுதல்
ஜூலை 24       மாவட்டம் விட்டு மாவட்டம்

பணி மாறுதல் 

ஜூலை 27 ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல்

பதவி உயர்வு

ஜூலை 30  பட்டதாரி ஆசிரியராக  பதவி உயர்வு அனைத்து பாடம்


பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட  தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளிக்கு வரும் போது தமது பதவிக்குரிய கண்ணியத்திற்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையில் ஆடை, அணிகலன்கள் அணிந்து வருமாறு உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர்  அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 28338 / பிடி2 / இ1 / 2012, நாள். 29.06.2012.
Click Here to Download







Blood Donation by Madurai school students 



Fixed fee at TN’s 788 teacher training colleges


பள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 07.07.2012 விடுமுறை அளித்து உத்தரவு.

அரசு கடித எண். 20418 / ஈ 1 / 2012 - 1, நாள். 15.06.2012
ஜூலை 7 ந் தேதி நடைபெற உள்ள TNPSC தேர்வுகளான குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் அன்றைய தினம் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu Elementary Director proceedings Rc.No. 15069/J3/2012 Dt. 22.06.2012
NATIONAL UNITED INSURANCE COMPANY FOR N.H.I.S.


NHIS -க்கு NATIONAL UNITED INSURANCE COMPANY தேர்வு 
செய்யப்பட்டுள்ளது. 11.6.2012 to 30.6.2012 வரை சிகிச்சை 
பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் G.O. 221 - இல் 
உள்ள படிவத்தில் விண்ணப்பித்து பெறலாம்.


Click Here to Download the G.O. 221 Dt 20.6.2012 
finance dept 
கருணை அடிப்படை பணி நியமனங்கள் 
ஆணை மற்றும் தெளிவுரை.


விண்ணப்பம் அளிக்கும்போது திருமணமாகமல் இருந்து பின்னர் 
திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனங்கள் 
வழங்குதல் ஆணை மற்றும் தெளிவுரைகள்.


Click Here to Download the G.O. 165 LABEMP Dept Dt.30.08.2010.
Click Here to Download the Clarification Lr. 96 Dt,18.06.2012
பல்வேறு பல்கலைகழகங்களில் பெற்ற கல்வி தகுதியினை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிக்கு இணையாக
 கருதி ஆணையிடப்பட்டுள்ளது.


Click Here to Download the G.O.133 School Education
Date. 04.06.2012
முன் அனுமதி பெறாமல் படித்த
உயர் கல்விக்கு பின்அனுமதி.

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன்அனுமதி பெற வேண்டும் 
என்பது விதிமுறை. ஆனால் சில நேரங்களில் அனுமதி பெறாமல் 
சிலர் படித்து விடுகின்றனர். பின்னர் பின்அனுமதி கோருகின்றனர்.
இது போன்றவர்களுக்கு பின் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இது போன்று எழுந்த நிலைகளை தொடர்ந்து தற்போது சம்பந்தப்பட்ட 
ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் பெற்று பின் அனுமதி வழங்கிட 
தொடக்க கல்விஇணை இயக்குனர் நிர்வாகம் அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 
அவர்கள் பின் அனுமதி வழங்கிட ந.க.எண்.1908/அ 5/2010 நாள .30.8.2011. இன் 
மூலம் உத்தரவிட்டுள்ளார்கள்.

Click Here to Download the Proceeding in jpg format

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு - அரசாணை  வெளியீடு.

இந்திராகாந்தி திறந்தவெளிபல்கலை
கழகம்.  B.Ed.,  ஜனவரி 2013  சேர்க்கை 
அறிவிப்பு. 

 Application Cost :                 Rs.500/- at Counter
                              :                 Rs.550/- by Post


Last Date to submit Appn         : 15.07.2012
Entrance Exam                           : 19.08.2012 
Programme Fee                         : Rs.17400/-


Note: விண்ணப்பம் பெரும்போது 2007 to 2011 B.Ed., Entrance test 
              Question papers இலவசமாக வழங்கப்படும் என Prospectus -  
              இல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - தமிழக அரசு ஆணை.

1. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது
 ஒழுங்கு நடவடிக்கை எடுத்து,      அவர்களுக்கு கடும்
 தண்டனையான (Major Punishment) அதாவது கட்டாய 
ஓய்வு (Compulsory Retirement) / பணிநீக்கம் (Removal) / 
பணியறவு (Dismissal) போன்ற தண்டனை வழங்கப்படும்.
 (அரசு பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்துவரையில்,
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2)
 இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு
 மேற்குறிப்பிட்ட தனடனைகளுள் ஒன்று வழங்கப்பட
 வேண்டும் என தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழங்கு மற்றும்
 மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.

OBSERVANCE OF "ANTI CHILD LABOUR DAY" TAKING PLEDGE ON 12TH JUNE EVERY YEAR.



 தொடக்கக் கல்வி - குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - 2012 -        12.06.2012 அன்று அனுசரிக்கப்பட உள்ள குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு  தினத்தன்று உறுதிமொழி எடுக்க உத்தரவு.


PENSIONERS FAMILY SECURITY FUND 

SCHEME AMOUNT RAISED FROM 

Rs.25000/- to Rs.35000/


PENSION – Tamil Nadu Government Pensioners’ Family Security Fund Scheme – Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of pensioners – Orders – Issued. 


CLICK HERE TO DOWNLOAD THE G.O.
  பள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களை


 உதவி ஆசிரியர்கள் என குறிப்பிடாமல் பட்டதாரி 


 ஆசிரியர்கள் (பாடம்) என குறிப்பிட உத்தரவு.


  தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனரிடம் 
   பட்டதாரி ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என குறிப்பிடுவதை 
   தவிர்த்து பட்டதாரி ஆசிரியர் என பாடத்துடன் குறிப்பிட உத்தரவிட கோரி 
   மனு அளிக்கப்பட்டிருந்தது.   அதனை ஏற்று ந.க. எண். 28042/சி5/இ2/2012.
   நாள். 19.04.2012.- இன் மூலம் இனி பட்டதாரி ஆசிரியர்களை, உதவி 
   ஆசிரியர்கள் என குறிப்பிடாமல் ( ) பாடம் குறிப்பிட்டு பட்டதாரி ஆசிரியர் 
   என குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

                தமிழக தமிழாசிரியர் கழகத்தை மனதார வாழ்த்துகிறோம். பட்டதாரி 
  ஆசிரியர்களின்  கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறார்கள். பாராட்டுகிறோம்.
  இடைநிலை ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என குறிப்பிடுவதை
  தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

               இடைநிலை ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என அழைப்பதில்
  ஒரு அற்ப சந்தோசம் பலருக்கு.  எனவே இவர்களை வைத்து சங்கம்
  நடத்தியவர்களுக்கு இதை சிந்திக்கவே நேரம் இல்லை. 


தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் இடைநிலை ஆசிரியர்களை உதவி ஆசிரியர் என அழைப்பதை தவிர்த்து இடைநிலை ஆசிரியர்கள் என மட்டும் குறிப்பிட உத்தரவிடக் கோரி தொடக்க கல்வி துறையிடம் மனு அளிக்கும்.