பள்ளிக்கல்வி - த.ப.க.சா.நி.பணி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வின்றி பணியாற்றி 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில்) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல் - உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட உள்ள மறு ஆய்வு / சிறப்பு விடுப்பு மனுவில் வழங்கப்படும் தீர்ப்பிற்குட்பட்டு ஆணை வெளியீடு.


முதன்மை நிலை விளையாட்டு மையத்தில்சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.


திருவள்ளூர்:முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு, 2011ம் ஆண்டு, சென்னையில் முதன்மை நிலை விளையாட்டு மையத்தை துவக்கிஉள்ளது. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் நேரு விளையாட்டரங்கிலும், மாணவியர்களுக்கான மையம் நேரு உள்விளையாட்டு அரங்கிலும் செயல்பட்டு வருகிறது.

இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்துள்ளது. அதன் உயர் நீதி மன்றத்தின் நகல்


 இடைக்காலத்தடை நகலினை பதிவிறக்கம் செய்ய.........

8%அகவிலைப்படி உயர்வு.

மத்திய அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி   72% லிருந்து 80% ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

New Delhi: The Union Cabinet on Thursday approved a proposal to increase dearness allowance (DA) by 8 percent to 80 percent from existing 72 percent.
மாண்புமிகு முதல்வர் அவர்களிடம், 

     CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டிடும் கோரிக்கையினை ஆசிரியர்கள்  ஒவ்வொருவரும் அனுப்புவது பயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம் ஒன்றினை தயாரித்து வெளியிட்டுள்ளோம்.

 இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல், இக்கோரிக்கை அவசியம் என எண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும் இதனை பதிவிறக்கம் செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகள் நீங்கள் அறிந்தவைகளே. இருப்பினும் இந்த விண்ணப்பத்தில் சங்கம் சார்ந்த கருத்துக்களே இடம்பெறவில்லை.  எனவே கல்விசேவை செய்துவரும் நம் ஆசிரியர் சமுதாய இணைய சேவை செய்துவரும் தோழர்கள் அனைவரும் இதனை வெளியிட்டு உதவிட அன்புடன் கேட்டுகொள்கிறோம்.



தொடக்கக் கல்வி - அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 23-4-2013 அன்று உலக புத்தகதினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு. ந.க.எண் - 9013/ஜே3/2013 நாள் - 10.4.2013.



அனைவருக்கும் கல்வி இயக்கமும் தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள SSA CEO, DEEO, ADPC, AEEO, ADDL AEEO, BRC SUPERVISORS, 2 BRTEs 15.04.2013 முதல் 30.04.2013 வரை கூட்டம் நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த முடிவு: சட்டசபையில் மசோதா தாக்கல்.

ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த தெளிவுரை.
Letter No. 34124 (Pay cell) 2009-1, Dated. 26.6.2009

பல்வேறு காரணங்களினால் அறிந்தவைகளே சில நேரங்களில் நமக்கு மறந்துவிடுகிறது. எனவே நம் நண்பர்களுக்காக நினைவுபடுத்துவதற்காக இதனை வெளியிடுகிறோம்.

ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும்போது ரூபாயை தொடர்ந்துவரும் பைசா தொகை 99 பைசாவுக்கு குறைவாக வந்தால் அதனை கணக்கில் கொள்ளகூடாது. ஒரு ரூபாய் அல்லது அதற்கு மேல்வரும் தொகையை அதற்க்கு அடுத்த பத்து ரூபாயாக கணக்கில் கொள்ளவேண்டும். 

உதாரணமாக ரூ.750.70 என வந்தால் 750 என கணக்கில் கொள்ளவேண்டும். ரூ.751 என வந்தால் மட்டுமே ரூ.760 ஆக கணக்கில் கொள்ளவேண்டும். 

இவ்வாறான விளக்கம் Letter No.34124 (Paycell) 2009-1, Dated.26.6.2009 - இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிந்துகொள்வோம். நம் நண்பர்களுக்கும் தேவைப்படும்போது தெளிவுபடுத்துவோம்.

CLICK HERE TO DOWNLOAD THE CLARIFICATION LETTER


பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்ட 5 ரூபாய் நாணயத்தில் அவரின் பெயர் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று பெருமையுடன் நினைவுகூர்வோம்.
                  அனைவருக்கும் இனிய தமிழ்  
            புத்தாண்டு வாழ்த்துக்கள்.



தவணையல்ல, உரிமை.


பள்ளி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஒரு மாதத்துக்கு மேலாக வசூலிக்கக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, ஒரு பள்ளி மாணவருக்கான கல்விக் கட்டணத்தை அந்தந்த மாதம் 10-ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதுமானது என்கிறது தீர்ப்பு.
தமிழகத்தில், அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும், ஆன் -லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதில், 22 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளன.

"ஆதார்' எண்ணை தபால் நிலையங்களில் பதிவு செய்து பயனடையலாம்  அரசு திட்டங்களை விரைவாகப் பெற வழிவகை.


தமிழகத்தில் ஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் அந்த எண்ணைப் பதிவு செய்து கொள்வதன் மூலம், மத்திய அரசின் திட்டங்களை எளிதில் பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த 

தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "பெஞ்ச்' தடை.


சென்னை: "கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது.

PENSION – TN Govt Pensioners’ Family Security Fund Scheme – Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of pensioners – Orders – Issued.


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு.

சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. இதையடுத்து, "டேட்டா சென்டரில்" மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கயத்தாற்றில் மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு.


சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாற்றில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி) கோரிக்கை வைத்தார்.

நடப்பு கல்வியாண்டில் புதிதாக 12 கல்லூரிகள்: முதல்வர்.

சென்னை: "நடப்பு கல்வியாண்டில், புதிதாக, 12 கல்லூரிகள் துவக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பிரிந்து உதயமாகும் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம்.


 கடலூர் மாவட்டத்தில் 14-வது ஊராட்சி ஒன்றியமாக, 3 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பிரிந்து ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் உதயமாகிறது.

சென்னை, திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் ரூ.918 கோடியில் குடியிருப்புகள் : மதுரை அருகே துணை நகரம் - சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரையில் துணைக்கோள் நகரம்
மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்: துபாய் மாணவர்கள் சாதனை.

ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்: துபாய் மாணவர்கள் சாதனை.

ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜூன் மாதம் நடக்கிறது வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம்.


கோவை: வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பழைய போட்டோக்களை மாற்ற ஜூன் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் 
விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது. ஆங்கிலம் இரண்டாம் தாளில், என்ன மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்கின்றனரோ, அதே மதிப்பெண்கள், ஆங்கிலம் முதல் தாளுக்கும் வழங்கப்படும் என, தேர்வுத் துறை முடிவு செய்து, பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது.

ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு தானிய வகை நொறுக்குத் தீனிகள்: அமைச்சர் பா.வளர்மதி.


பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு தானியங்கள் அடங்கிய நொறுக்குத் தீனிகள் வழங்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி அறிவித்தார்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத (CBSE/ ICSE) பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25% மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு


அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடு விதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு. GPF – Withdrawal from the GPF – Maximum limit – Amendments to rule 15-B of GPF (Tamil Nadu) Rules – Issued – Notified - To Download GO.NO.103 Finance (Allowances) Dept Dated.01.04.2013.