1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்ததால்,அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு ஓர் ஆசிரியர் விண்ணப்பம்

State-wise List of fake Universities 

மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை

திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள்
குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர்.
மாநில பார்வையாளர்கள் குழு பள்ளிகளை பார்வையிடும் 
போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள்
முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

பிளஸ்–2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றம் புதிய பாடப்புத்தகம் தயாரிக்கும் பணியில் 500 ஆசிரியர்கள்.

பிளஸ்–2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டத்தின் படி புதிய பாடப்புத்தகங்களை 500 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் எழுத உள்ளனர்.
நவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: தமிழக முதல்வர்.

சென்னை: தமிழகத்துடன் குமரி இணைந்த நவம்பர் 1ம் தேதி அரசு விழா கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

குறைந்த செலவில் சமையல் எரிவாயு தயாரிக்கும் திட்டம்: பள்ளி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் பரிசு.

அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி போட்டியில் கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மாணவிகள் உருவாக்கிய குறைந்த செலவில் சமையல் எரிவாயு தயாரிக்கும் திட்ட மாதிரிக்கு முதல் பரிசும், தங்கப்பதக்கங்களும் கிடைத்துள்ளன.

த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்.


எமது தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுசெயலாளர், தலைவர், பொருளாளர் உள்ளிட்ட   ஆசிரியர்கள் திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நேற்று முதல் வெளியிருப்புப் போராட்டம். போராட்டம் இன்றும் தொடர்கிறது.

                               ஊழல்கள் குறித்து தகவல்   கோரியது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுசெயலாளர் அவர்களின் மனைவி, தலைமை ஆசிரியர் பணியிலிருந்து நிரந்தர பணி நீக்கம் செயப்பட்டார்கள். அதனை ரத்து செய்ய கோரியும் மேலும் பணி மாறுதல்களில் ஏற்பட்ட முறைகேடுகளை நீக்க வலியுறுத்தியும் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது. 

நேற்று நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை அதிகாரிகளுடன் நடைபெற்றுள்ளது. 

முழுமையான தீர்வு ஏற்படாததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது. நல்ல தீர்வு ஏற்படும்  என்ற நம்பிக்கையில் போராடும் பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர். 

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 



தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு.


ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை, தாங்களே, அட்டெஸ்ட்செய்து கொள்ளலாம்; - மத்திய மனித வள துறை அனுமதி.

கோபப்படும் மாணவர் சமுதாயத்தை 

நல்வழிப்படுத்த சிறப்புப் பயிற்சி.

தூத்துக்குடி: எதற்கெடுத்தாலும் கோபம் வரக் கூடிய வகையில் மாணவர்கள் மாறி வருவதால் அவர்களுக்கு அந்த கோபத்தை குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்றைய மாணவ, மாணவிகளுக்கு அறிவு வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. அதே அளவிற்கு கோபமும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தினால் பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடந்து விடுகிறது. இதன் மூலம் மாணவ சமுதாயத்தின் மீது ஒருவித களங்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்"


நாமக்கல்: நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.

         தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியை பாராட்டி மத்திய நீர்வளத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சிறப்பாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு "தமிழ்நாடு ஆசிரியர் அரங்கத்தின் சார்பில் பாராட்டுகள்.


அகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த உத்தரவு




Revised Scales of Pay, 2009 – Recommendations of the One Man Commission –Fixation of pay of Junior Assistants / Agricultural Officers etc. selected prior to 1--6--2009 and appointed on or after 1--6--2009 due to administrative reasons –
Allowing of fitment benefit – Orders – Issued.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் 1.6.2009 -க்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டு 1.6.2009 -க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட அரசாணை.



ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

FULBRIGHT விருது: விண்ணப்பிக்க நவ.,20 கடைசி.

தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமெரிக்க ஜக்கிய நாடுகள் மற்றும் இந்திய கல்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த விருதினை வழங்குகின்றது. தகுதியுள்ளவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்கள் மட்டுமின்றி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் நூலக சிறப்பாளர்கள், வழிகாட்டு கவுன்சிலர்கள், பாடத்திட்ட சிறப்பாளர்கள், சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
நவம்பர் 20 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு http://www.usief.org.in/Fellowships/Distinguished-Fulbright-Awards-Teaching-Program.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி - இறந்த அரசு ஊழியரின் வாரிசு நியமனம் குறித்த விதி 30ல் திருத்தம் மேற்கொண்டு தமிழக அரசு உத்தரவு.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டிய நிலையில், முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு மேற்கொண்டால் அதற்கு விதிகளின்ப்படி தக்க ஒழுங்கு நடவடிக்கை தான் எடுக்க வேண்டுமே தவிர ஊக்க ஊதிய உயர்வினை இரத்து செய்ய கூடாது என இயக்குநர் உத்தரவு. (1999 - இல் வெளியான உத்தரவு நகல்.)

உயர்க்கல்வி - மதுரை காமராஜர் பல்கலைகழகத்தால் வழங்கப்படும் பி.ஏ., ஆங்கிலம் (தொழிற்கல்வி) பட்டமானது, பி.ஏ., ஆங்கில (இலக்கியம்) பட்டத்திற்கு இணையானது என தமிழக அரசு உத்தரவு.