அண்ணாமலை பல்கலைக்கழகம் 21-ம் தேதி மீண்டும் திறப்பு: துணைவேந்தர் தகவல்.


சிதம்பரம், நவ. 17-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஊழியர்களை குறைக்கப் போவதாகவும், சீனியர்களின் சம்பளத்தை கணிசமாக குறைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக கடந்த 14-ம் தேதி துணைவேந்தர் ராமநாதன் அறிவித்தார்.

இதையடுத்து ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனால் ஊழியர்கள்பணிக்குத் திரும்ப ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர் ராமநாதன் நவம்பர் 21-ம் தேதி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கும் என்று அறிவித்துள்ளார்.

மருத்துவம், பல் மருத்துவம், பி.எட், எம்.எட் மற்றும் ஆராய்ச்சி வகுப்புகள் 21ம் தேதி தொடங்கும். வேளாண் மாணவர்களுக்கு 26-ம் தேதியும், மற்ற மாணவர்களுக்கு 30-ம் தேதியும் தேர்வு நடைபெறும் என்று துணைவேந்தர் அறிவித்தார்.

No comments:

Post a Comment